அமெரிக்க வணிக வளாகத்தில் துப்பாக்கிச்சூடு; ஒருவர் பலி

அமெரிக்காவில் வணிக வளாகத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் வாலிபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
 | 

அமெரிக்காவின் நாஷ்வில்லே நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் நேற்று மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதையடுத்து அப்பகுதியில் இருந்த மக்கள் அலறியடித்து கொண்டு வணிக வளாகத்தை விட்டு வெளியேறினர். உள்ளூர் நேரப்படி நேற்று மதியம் 2 மணி அளவில் இந்த துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. இதில் 22 மதிக்கத்தக்க ஒரு வாலிபர் குண்டடி பட்ட காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதற்கிடையே காவல்துறைக்கு  தகவல் தெரிவிக்கப்பட்டு, மர்ம நபரை பிடிக்கும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டனர். தொடர்ந்து துப்பாக்கி முனையில் அவரை கைது செய்து காவல்துறை தரப்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இரண்டு வாலிபர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் தான் இந்த துப்பாக்கிச்சூடு நடந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP