அமெரிக்க உணவகத்தில் துப்பாக்கிச்சூடு; 4 பேர் பலி

அமெரிக்காவில் உள்ள ஒரு உணவகத்தில் நிர்வாணமாக வந்த நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 4 பேர் பலியாகினர்.
 | 

அமெரிக்க  உணவகத்தில் துப்பாக்கிச்சூடு; 4 பேர் பலி

அமெரிக்க  உணவகத்தில் துப்பாக்கிச்சூடு; 4 பேர் பலி

அமெரிக்காவில் உள்ள ஒரு உணவகத்தில் நிர்வாணமாக வந்த நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 4 பேர் பலியாகினர். 

அமெரிக்காவில் டென்னிஸி என்ற மாகாணத்தில் வேஃபிள் ஹவுஸ் என்ற உணவகம் உள்ளது. நேற்று இரவு இந்த உணவக விடுதிக்கு நிர்வாணமாக ஒரு நபர் வந்துள்ளார். பின் தன்னுடைய கையில் இருந்த AR-15 வகை துப்பாக்கியால் சரமாரியாக சுட ஆரம்பித்தார். அங்கிருந்த வாடிக்கையாளர்களின் ஒருவர் அவரிடம் உள்ள துப்பாக்கியை சண்டையிட்டு பறித்துள்ளார். உடனே அந்த நபர் ஓடி விட்டார்.

தொடர்ந்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் வந்து விசாரணை செய்தனர். இதற்கிடையே துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர்.ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். மேலும் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

காவல்துறை விசாரணை செய்ததில் தாக்குதல் நடத்தியவரின் பெயர் ட்ராவிஸ் ரெய்ங்க்கிங் என்பது தெரிய வந்தது. ஏற்கனவே இவர் வெள்ளைமாளிகை அருகே தடை செய்யப்பட்ட பகுதியில் நுழைந்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளார். 

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அதிகமா நடைபெற்று வருகின்றன. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் லாஸ் வேகாஸில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பொதுமக்கள் 58 பேரும், கடந்த பிப்ரவரி மாதம் புளோரிடா மாகாணத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 17 பேரும் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP