'ஆசிரியர்களுக்கு துப்பாக்கி'; டிரம்ப்பின் சூப்பர் ஐடியா!

அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் உள்ள ஒரு பள்ளியில் கடந்த வாரம் நடந்த துப்பாக்கிச் சூடு அந்நாட்டில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 | 

'ஆசிரியர்களுக்கு துப்பாக்கி'; டிரம்ப்பின் சூப்பர் ஐடியா!


அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் உள்ள ஒரு பள்ளியில் கடந்த வாரம் நடந்த துப்பாக்கிச் சூடு அந்நாட்டில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்று தொடர்ந்து நடக்கும் துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தடுக்க ஆசிரியர்களுக்கு துப்பாக்கி கொடுக்கலாம் என்ற ஆலோசனையை முன்வைத்திருக்கிறார் டிரம்.

அமெரிக்காவில் தினம் தினம் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன. அவ்வப்போது, பள்ளி, பல்கலைக் கழகங்களிலும் துப்பாக்கிச் சூடு நடக்கிறது. இதில், ஏராளமான அப்பாவி மாணவர்கள் உயிரிழக்கின்றனர். கடந்த சில வருடங்களில் பள்ளிகளில் நடந்த துப்பாக்கி சூடு வன்முறைகளில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதனால், பள்ளிக்கு செல்வதற்கே குழந்தைகள் பயப்படும் நிலை அங்கு உள்ளது. 

அந்நாட்டில் கட்டுக்கடங்காமல் வளர்ந்து வரும் துப்பாக்கிச் சூடு கலாச்சாரம் தான் இதற்கு காரணம் என குற்றம்சாட்டப்படுகிறது. கைத்துப்பாக்கிகள் மட்டுமல்லாமல் ஒரே நேரத்தில் பலரை சுடும் அசால்ட் ரைபிள் ரக துப்பாக்கிகளும் பொதுமக்களிடையே பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால், மனநிலை சரியில்லாதவர்கள், பள்ளி சிறுவர்கள் அதிகமாக துப்பாக்கிச் சூடுகளில் ஈடுபடுவது வாடிகையாகிவிட்டது. இதை தடுக்க பலமுறை வலியுறுத்தப்பட்ட போதும், குடியரசு கட்சியை சேர்ந்தவர்களை அதை தடுத்து விடுவார்கள். 

அரசியல் சாசனப்படி துப்பாக்கி உரிமை உள்ளதாக கூறி, அதன் மேல் எந்த தடையும் விதிக்க முடியாது என குடியரசு கட்சி கூறி வருகிறது. ஆனால், சமீபத்தில் நடந்த ஃப்ளோரிடா மாகாண துப்பாக்கிச் சூட்டுக்கு பிறகு, அசால்ட் ரைபிள் ரக துப்பாக்கிகள் மீது தடை விதிக்க பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. சம்பவம் நடந்த பள்ளியின் மாணவர்கள், வீதிகளில் துப்பாக்கிகளை குறைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருகின்றனர். 

இந்நிலையில், நேற்று துப்பாக்கிச் சூடு நடந்த பள்ளியின் மாணவர்களை அதிபர் டிரம்ப் சந்தித்து பேசினார். அப்போது, "பள்ளிகளில் துப்பாக்கிச் சூட்டை தடுக்க, ஆசிரியர்கள் கையில் துப்பிக்கிகளை கொடுத்தால் போதும்" என கூறினார். இது மேலும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP