அமெரிக்காவைத் தொடர்ந்து ஜெருசேலத்தில் தூதரகம் அமைத்த கவுதமாலா!

அமெரிக்காவைத் தொடர்ந்து லத்தீன் அமெரிக்கா நாடுகளில் ஒன்றான கவுதமாலாவும் ஜெருசேலமில் தூதரகத்தினை திறந்துள்ளது.
 | 

அமெரிக்காவைத் தொடர்ந்து ஜெருசேலத்தில் தூதரகம் அமைத்த கவுதமாலா!

அமெரிக்காவைத் தொடர்ந்து ஜெருசேலத்தில் தூதரகம் அமைத்த கவுதமாலா!

அமெரிக்காவைத் தொடர்ந்து  லத்தீன் அமெரிக்கா நாடுகளில் ஒன்றான கவுதமாலாவும்  ஜெருசேலமில் தூதரகத்தினை திறந்துள்ளது.

உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி இஸ்ரேல் தலைநகராக ஜெருசேலம் நகரை அமெரிக்க அதிபர் டிரம்ப் அங்கீகரித்தார். கடந்த மே 14ம் தேதி அப்போதைய இஸ்ரேல் தலைநகரான டெல் அவிவ்-ல் உள்ள அமெரிக்கா தூதரகம் ஜெருசேலம் நகருக்கு மாற்றப்பட்டது. இதனால் பாலஸ்தீனியர்களுக்கும், இஸ்ரேல் படையினருக்கும்  இடையே மீண்டும் ஒரு தாக்குதல் நடந்தது. 

இதை எதிர்த்து பாலஸ்தீனியர்கள் காசா எல்லைப் பகுதியின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தினர். இதில் இஸ்ரேல் படையினர், போராட்டம் நடத்துபவர்கள் அதிரடி தாக்குதலை நடத்தினர். இந்த தாக்குதலில் 60 பாலஸ்தீனியர்கள் பலியாகியுள்ளனர். அவர்கள் இஸ்ரேல் படைக்கு எதிராகவும், அமெரிக்காவிற்கு எதிராகவும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் பல கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒன்றான கவுதமாலாவும் ஜெருசேலமில் நேற்று தூதரகத்தை திறந்துள்ளது. இதில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நீதன்யாகு, கௌதமாலா நாட்டின் அதிபர் ஜிம்மி மார்ல்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய நீதன்யாகு, ஜெருசலேமில் தூதரகத்தை திறந்ததற்கு, கவுதமாலாவுக்கு பாராட்டு தெரிவித்தார். அடுத்த வெளிநாட்டுப் பயணமாக, கவுதமாலாவுக்குச் செல்வேன் எனவும் அவர் கூறினார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP