அமெரிக்காவில் பரவி வரும் ஆடு யோகா பயிற்சி!   

அமெரிக்காவில் ஆடு யோகா எனும் பயிற்சி தற்போது வேகமாகப் பிரபலமாகி வருகிறது. வினோதமான இந்த யிற்சியுடன் சிறிதளவு வைனும் பரிமாறப்படுகிறது. ஆட்டுப் பண்ணையில் நடக்கும் இந்தப் பயிற்சிக்கு மக்கள் குவிந்து வருகின்றனர்.
 | 

அமெரிக்காவில் பரவி வரும் ஆடு யோகா பயிற்சி!   

அமெரிக்காவில் உள்ள சில மாகாணங்களில் ஆடு யோகா  என்ற பெயரில் புதிய உயற்பயிற்சி முறை தற்போது வேகமாக பிரபலமாகி வருகிறது. வினோதமான இந்த யோகா பயிற்சியின் கூடவே குடிப்பதற்கு சிறிது வைனும் பயிற்சி செய்பவர்களுக்கு பரிமாறப்படுகிறது. 

அமெரிக்காவின் விர்ஜீனியா மாகாணத்தில் உள்ள நோக்ஸ்வில் பகுதியின் இயற்கையான சூழலில் அதாவது ஆட்டு மந்தை போன்ற இடத்தில் யோகா பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. அதில் அங்கு அருகில் உள்ள ஆட்டுப்பண்ணையில் இருந்து வரும் ஆடுகள் யோகா செய்வோரின் முதுகில் ஏறி அமர்ந்து கொள்கின்றன.  இங்கு பயிற்சி செய்ய வருபவர்களுக்கு இது புதுவிதமான அனுபவத்தை ஏற்படுத்துவதாக அங்குள்ள மக்கள் கூறுகின்றனர்.

இது பார்ப்பதற்கு வேடிக்கையாக இருப்பதுடன், மன அமைதியையும் ஏற்படுத்துவதாக இங்கு யோகா பயிற்சி செய்ய வரும் மக்கள் கூறுகின்றனர். இந்த பயிற்சி வகுப்பில் 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.  இந்த ஆடு யோகா பயிற்சிக்கு சிறப்பு யோகா பயிற்சியாளர்கள் உதவுகின்றனர். 

கொழுப்பைக் குறைக்கவும், உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்கவும் உதவிடும் யோகா பயிற்சியுடன், ஆடுகளின் நட்புணர்வும், புத்துணர்ச்சிக்காக அருந்திடும் சிறிதளவு வைனும் தனியானதொரு சிறப்பான அனுபவத்தை தருவதாக இங்கு பயிற்சிக்காக குவிந்து வரும் மக்கள் குறிப்பிடுகின்றனர். விர்ஜீனியா, ஒரேகாேன் போன்ற மாகாணங்களில் இந்த ஆடு யோகா பயிற்சி வேகமாக பரவி வருகிறது. இதனால் தங்கள் நோய் குணமடைவதாகவும் 4 சுவற்றுக்குள் உடற்பயிற்சி செய்வதை போல் சோர்வான அனுபவத்தை இந்தப் புதிய பயிற்சி முறையில் ஏற்படுவதில்லை என இங்கு வந்து பயிற்சி மேற்கொள்பவர்கள் தெரிவித்துள்ளனர். 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP