நகரும் விமானத்திலிருந்து இறங்கி கிகி நடனம்!- கைமீறி செல்லும் வைரல் சாகசம்

மெக்சிகோ விமானி ஒருவர் நகரும் விமானத்திலிருந்து இறங்கி தனது பணிப்பெண் ஒருவருடன் கிகி நடனமாடும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. விமானத்திலிருந்து இறங்கி ஆடும் இந்த வீடியோ தவறான முன்னுதாரணமாகும் என்ற அச்சம் பரவலாக எழுந்துள்ளது.
 | 

நகரும் விமானத்திலிருந்து இறங்கி கிகி நடனம்!- கைமீறி செல்லும் வைரல் சாகசம்

மெக்சிகோ பெண் விமானி ஒருவர் நகரும் விமானத்திலிருந்து இறங்கி பணிப்பெண் ஒருவருடன் கிகி நடனமாடும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
விமானத்திலிருந்து இறங்கி ஆடும் இந்த வீடியோ தவறான முன்னுதாரணமாகும் என்ற அச்சம் பரவலாக எழுந்துள்ளது. 

சமூக வலைத்தளங்களில் சமீப காலமாக 'கிகி சேலஞ்ச்' நடன வீடியோக்கள் பரவலாகி வருகிறது. ஓடும் கார், இரண்டு சக்கர வாகனம், ஆட்டோ, ரயில் என்று வைரலாகி வந்த இந்த சாகசம் தற்போது அடுத்தக்கட்டமாக மிகவும் ஆபத்தான நிலைக்கு சென்றுள்ளது. 

இந்தியாவில் இது போல, ஓடும் வாகங்களிளிருந்து இறங்கி நடனமாடும் 'கிகி' எனும் நடன காட்சியை சமூக வலைத்தளங்களில் பலரும் வெளியிட்டனர். பின், இந்த விபரீத செயலில் ஈடுபட்டால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்தனர்.

இந்த நிலையில் மெக்சிகோ விமானி ஒருவர் நகரும் விமானத்திலிருந்து இறங்கி விமான பணிப்பெண் ஒருவருடன் 'கிகி' நடனமாடும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அலெஜண்ட்ரா மன்ரிவேஸ் என்னும் அந்த பெண் பைலட் தனது விமான பணிப்பெண் ஒருவருடன் கனேடிய பாடகரான டிரேக்கின்இன் மை பீலிங் என்ற பாடலுக்கு  கிகி நடனமாடுகிறார். 

விமானத்தை இயக்கி விட்டு அது நகரும்போதே கீழிறங்கும் அலெஜண்ட்ராவும் அந்த பணிப்பெண்ணும் விமானத்துடன் நடனமாடியபடியே முன்னோக்கி செல்கின்றனர். டிவிட்டரில் வெளியிடப்பட்ட அலெஜண்ட்ராவின் இந்த 'கிகி' நடனத்தை தற்போது வரை 79,429 பேர் பார்த்திருக்கிறார்கள்.

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP