'ப்ளேபாய்' இதழின் முன்னாள் பிரபல மாடல் மர்ம மரணம்!

பிரபல மாடலிங் இதழான 'ப்ளேபாய்'-யின் முன்னாள் மாடல் ஒருவர் அவரது வீட்டில் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக அமெரிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
 | 

'ப்ளேபாய்' இதழின் முன்னாள் பிரபல மாடல் மர்ம மரணம்!

பிரபல மாடலிங் இதழான 'ப்ளேபாய்'-யின் முன்னாள் மாடல் ஒருவர் வீட்டில் கழுத்து நெரிக்கப்பட்டு மரணமடைந்த நிலையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் வசித்து வந்தவர் கிறிஸ்டினா கார்லின்-க்ராஃப்ட் (36). நியூயார்க் நகரைச் சேர்ந்த இவர் வேனிட்டி ஃபேர், மேக்ஸிம் இதழ், விக்டோரியா சீக்ரட் மற்றும் பிளேபாய் உள்ளிட்ட பிரபல இதழ்களின் மாடலாக இருந்துள்ளார். இந்த நிலையில் கழுத்து நெரிக்கப்பட்டு இறந்த நிலையில் அவரது உடலை  வீட்டிலிருந்து கடந்த 22ம் தேதி பென்சில்வேனியா போலீசார் மீட்டுள்ளனர். 

அது அவரது சொந்த வீடு இல்லை. அவரது ஆண் நண்பர் ஒருவரின் வீடு அது. அவர்கள் இருரும் கடந்த ஒன்பது ஆண்டுகளாக இணைந்து வாழ்ந்ததாகவும் கூறப்படுகிறது. சில தினங்களுக்கு முன்பு வீட்டில் இருந்த சில பொருட்கள் காணாமல் போனது. இது தொடர்பாக அவர் போலீசில் புகார் அளித்திருந்தார். இந்தநியைில் கிறிஸ்டினா கொலை செய்யப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த மரணம் தொடர்பாக அவரது அந்த வீடு இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் விசாரித்து வருகின்றனர். திருட்டுச் சம்பவம் நடந்த அன்றும் கொலை நிகழ்ந்த நாளிலும் ஒரே நபர் அந்த குடியிருப்புக்கு வந்ததை போலீசார் கண்டறிந்துள்ளனர். இதன் அடிப்படையில் சந்தேகத்துக்குரிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

newstm.in

 

 

 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP