ஈரானை கண்காணிக்க ஈராக்கில் படைகள் நிறுத்தப்படும்: ட்ரம்ப்

ஈராக்கில் உள்ள அமெரிக்க படைகளை தொடர்ந்து அங்கேயே நிறுத்தி, அண்டை நாடான ஈரானில் சந்தேகப்படும் படியான நடவடிக்கைகள் நடக்கிறதா, என கண்காணிக்க உள்ளதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
 | 

அமெரிக்க தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த ட்ரம்ப், ஈரான் மீது ஒரு கண் வைத்திருக்க, அமெரிக்க படைகளை ஈராக்கில் நிறுத்த உள்ளாதாக தெரிவித்தார். பாதுகாப்புத்துறையின் எச்சரிக்கையை மீறி, சிரியாவில் இருந்து அமெரிக்க படைகளை திரும்பப் பெறுவதாக ட்ரம்ப்  தன்னிச்சையாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஈராக்கில் அமெரிக்க படைகளை தொடர்ந்ந்து நிறுத்தப் போவதாக அவர் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

"ஈரானை, தொடர்ந்து கவனிக்கப் போகிறோம். அங்கு ஏதேனும் பிரச்னை வருகிறதா, அணு ஆயுதம் அல்லது மற்றவற்றை தயாரிக்க அவர்கள் முயற்சி செய்கிறார்களா என்பது குறித்து தொடர்ந்து கண்காணிக்கப் போகிறோம்" என்று ட்ரம்ப் கூறினார். 

newstm.in
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP