அரசு ஊழியர்களுக்கு, அமெரிக்கா வாழ் சீக்கிய மக்கள் உதவி

அமெரிக்காவில் நடைமுறையில் உள்ள அரசு செயல்பாடுகள் முடக்கம் காரணமாக ஊதியம் இன்றி தவித்து வரும் அரசு ஊழியர்களுக்கு, அமெரிக்கா வாழ் சீக்கிய மக்கள் உதவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது,
 | 

அமெரிக்க - மெக்சிகோ எல்லையில் அகதிகள் நுழைவதைத் தடுக்கும் வகையிலும், அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புக்கு வழிவகை செய்யும் வகையிலும் எல்லை சுவர் எழுப்ப அமெரிக்க அதிபர் ட்ரம்ப் திட்டமிட்டுள்ளார். 

இதற்காக 500 கோடி டாலர் நிதி ஒதுக்கக் கோரினார். ஆனால், அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அதிபர் ட்ரம்ப்பின் கோரிக்கைக்கு ஜனநாயகக் கட்சியின் எம்.பி.க்கள் செவி சாய்க்கவில்லை. 

இதனையடுத்து அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தொடங்கிய அரசு செயல்பாடுகள் முடக்கம்,  கடந்த 4 வாரமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக சுமார் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஊதியமின்றிப் பணியாற்ற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

இந்த விவகாரங்களுக்கு மத்தியில் ஊதியம் இன்றி உணவுக்கு தவித்து வரும் மக்களுக்கு, அமெரிக்காவில்  வாழும் சீக்கியர்கள் உணவு அளித்து உதவி வருவதாக தகவல்கள் தெரவிக்கின்றன. 

சீக்கியர்களின் வழிபாட்டு தளமான குருதுவாராவில் அரசு ஊழியர்களின் குடும்பத்தார் வந்து உணவு உட்கொண்டு செல்ல சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என சீக்கிய மையம் தெரிவித்துள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP