வலுவிழந்தது ஃபிளாரன்ஸ் புயல்; 15 பேர் பலி

அமெரிக்காவின் கிழக்கு மாகாணங்களை தாக்கிய ஃபிளாரன்ஸ் புயலால் 15 பேர் உயிரிழந்துள்ளனர். அதிதீவிர புயலாக இருந்த ஃபிளாரன்ஸ், தற்போது சாதாரண புயலாக வலுவிழந்துள்ளது.
 | 

விர்ஜினியா, வடக்கு, தெற்கு கரோலினா, வாஷிங்க்டன் டிசி உள்ளிட்ட அமெரிக்காவின் கிழக்கு மாகாணங்களை தாக்கிய அதிதீவிர ஃபிளாரன்ஸ் புயலால் பலியானோர் எண்ணிக்கை 15ஆக உயர்ந்துள்ளது. நேற்று அதிதீவிர புயலில் இருந்து சாதாரண புயலாக வலுவிழந்தாலும், கிழக்கு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், பல பகுதிகள் நீருக்குள் மூழ்கியுள்ளன. 900 பேர் மூழ்கிய பகுதிகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். 

10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் மின்சாரம்  இல்லாமல் அவதிப்படுவதாக தெரிகிறது. புயலால் கிழக்கு மாகாண பகுதிகள் 13 அடி வர நீரில் மூழ்கும் எனவும், 40 இன்ச் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளன.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP