விமானத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண் விமானி

விமானத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் விமானி
 | 

விமானத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண் விமானி

விமானத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண் விமானி

அமெரிக்காவில் பெண் விமானி ஒருவர், சக ஆண் விமானியால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார்.  

கடந்த வருடம் ஜூன் மாதம் அலாஸ்கா விமான நிறுவனத்திற்காக பெட்டி பீனா என்ற பெண் விமானி ஒப்பந்தம் செய்யப்பட்டார். அவருடன் மூத்த ஆண் விமானி ஒருவரும் பணியமர்த்தப்பட்டார். இந்நிலையில் விமான பயணத்தின் போது பீனாவிற்கு அந்த சக விமானி  மயக்க மருந்து கலந்த மது அளித்துள்ளார். இது தெரியாத அந்த பெண் விமானி பெட்டி பீனா மது அருந்திய சிறிது நேரத்தில் மயங்கி விழுந்துள்ளார். இதனை தொடர்ந்து விமானத்தை தரையிறக்கிய அந்த ஆண் விமானி, பீனாவை தன் அறைக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். மேலும், உடலில் காயங்கள் ஏற்படுத்தி கொடுமை படுத்தியிருக்கிறார். 

மயக்கம் தெளிந்த பீனா தனக்கு ஏற்பட்டிருக்கும் நிலையை அறிந்து இச்சம்பவம் குறித்து விமான நிறுவன உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். ஆனால் சம்மந்தப்பட்ட அதிகாரி மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து அந்த விமான நிறுவனத்திற்கு எதிராக பீனா வழக்கு தொடுத்துள்ளார். தனக்கு முன்பே வேறு பல பெண் விமானிகள் இப்படி பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள் என்றும் அந்த பெண்களின் வாக்குமூலம் தன்னிடம் இருப்பதாகவும் பீனா தெரிவித்துள்ளார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP