பத்திரிகையாளர்கள் விருந்தில் ட்ரம்ப்பை வறுத்தெடுத்த பெண் காமெடியன்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் வெள்ளை மாளிகை அதிகாரிகள் கலந்துகொண்ட பத்திரிகையாளர்கள் விருந்தில், பெண் காமெடியன் ஒருவர் ட்ரம்ப்பை கடுமையாக கலாய்க்க, அவர்கள் எழுந்து சென்று தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
 | 

பத்திரிகையாளர்கள் விருந்தில் ட்ரம்ப்பை வறுத்தெடுத்த பெண் காமெடியன்!

பத்திரிகையாளர்கள் விருந்தில் ட்ரம்ப்பை வறுத்தெடுத்த பெண் காமெடியன்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் வெள்ளை மாளிகை அதிகாரிகள் கலந்துகொண்ட பத்திரிகையாளர்கள் விருந்தில், பெண் காமெடியன் ஒருவர் ட்ரம்ப்பை கடுமையாக கலாய்க்க, அவர்கள் எழுந்து சென்று தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். 

அமெரிக்க அதிபர் சார்பாக வெள்ளை மாளிகை விவகாரங்களை பற்றி எழுதும் பத்திரிகையாளர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் விருந்து வழங்கப்படுவது வழக்கம். இதில் அதிபர் தனது மனைவியுடன் கலந்து கொள்வார். விருந்து மட்டுமல்லாமல், பிரபல காமெடியன்கள், அதிபர் உட்பட பலரை கிண்டலடித்து ஜோக்குகள் சொல்லும் கேளிக்கை அம்சங்களும் நடைபெறும். அதிபர்களும், தங்கள் பங்குக்கு எல்லோரையும் கிண்டலடித்து பேசுவார்கள்.

ஆனால், அதிபர் ட்ரம்ப், பதவியேற்றது முதல், பத்திரிகைகளையும், பத்திரிகையாளர்களையும் கடுமையாக விமர்சித்து வருவதால், அவருக்கும் ஊடகங்களுக்கும் சரியான உடன்பாடு இல்லை. கடந்த ஆண்டு நடைபெற்ற பத்திரிகையாளர் விருந்தில் அவர் கலந்துகொள்ளவில்லை. அப்போது இந்திய பூர்வீகம் கொண்ட அமெரிக்க காமெடியன் ஹசான் மினாஜ் ட்ரம்ப் மற்றும் அவரது அரசை கடுமையாக கிண்டலடித்தார். அப்போது ட்ரம்ப் மட்டுமல்லாமல் வெள்ளை மாளிகை அதிகாரிகள் யாருமே அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. 

ஆனால், இம்முறை வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பெண் காமெடியன் மிஷேல் வுல்ஃப் விருந்துக்கு அழைக்கப்பட்டிருந்தார். அவர் ட்ரம்ப், பத்திரிகையாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என அனைவரையும் கடுமையாக கிண்டலடித்தார். ட்ரம்ப்புக்கும் ஆபாச நடிகைக்கும் இருந்த தொடர்பு வெளியானது, அவர் பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதை வெளிப்படையாக ஒப்புக்கொண்ட வீடியோ, ரஷ்யா தொடர்புகள் உள்ளிட்ட பல விவகாரங்களை குறிப்பிட்டு மிஷேல் பேசினார். 

"இது எதுவுமே ட்ரம்ப்பை பாதிக்காது. அவர் விரும்பாத ஒன்று அவர் பணக்காரர் இல்லை என்று சொல்லுவது தான். எனவே இனி நான் அதை பற்றி பேசப்போகிறேன்" என கூறி, ட்ரம்ப் உண்மையிலேயே பணக்காரர் இல்லை என சொல்லி கிண்டலடித்தார். ட்ரம்ப்பின் செய்தித் தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த நிலையில், அவர் முன்னிலேயிலேயே "சாரா உண்மைகளை எரிப்பவர்" என கூறினார். இதையெல்லாம் கேட்ட பல வெள்ளை மாளிகை அதிகாரிகள், விருந்தில் இருந்து பாதியிலேயே எழுந்து சென்றனர். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP