டிரம்ப் நெருக்கடியால் எஃப்.பி.ஐ துணை இயக்குனர் ராஜினாமா!

டிரம்ப் நெருக்கடியால் எஃப்.பி.ஐ துணை இயக்குனர் ராஜினாமா!
 | 

டிரம்ப் நெருக்கடியால் எஃப்.பி.ஐ துணை இயக்குனர் ராஜினாமா!

அமெரிக்க புலனாய்வுத்துறை எஃப்.பி.ஐ-யின் துணை இயக்குனர் ஆண்ட்ரூ மெக்கேப், இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

அதிபர் டிரம்ப்பின் மீது விசாரணை நடத்தி வந்த எஃப்.பி.ஐ-யின் தலைவர் ஜேம்ஸ் கோமியை டிரம்ப் கடந்த ஆண்டு பணி நீக்கம் செய்திருந்தார். இது பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், டிரம்ப்பின் மீது விசேஷ கமிஷன் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. பணி நீக்கம் செய்யப்பட்ட ஜேம்ஸ் கோமியின் கீழ் பணியாற்றிய மெக்கேப், இரண்டு மாதங்கள் எஃப்.பி.ஐ இயக்குனராக பணியாற்றினார். பின்னர், கிறிஸ்டோபர் ரே என்பவர் இயக்குனராக நியமிக்கப்பட்டார். 

டிரம்ப்பின் மீது நடத்தப்பட்ட விசாரணையில், இதுவரை அவருக்கு நெருக்கமான நான்கு அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். சமீப காலமாக, டிரம்ப் மீது விசாரணை நடத்த எஃப்.பி.ஐ பல விதிமீறல்களில் ஈடுபட்டதாக டிரம்ப் தரப்பினர் குற்றம் சாட்டி வந்தனர். இந்நிலையில், மெக்கேப்பை குறிவைத்து பல்வேறு குற்றச்சாட்டுகளை டிரம்ப் சுமத்தி வந்தார்.

இன்னும் 6 வாரங்கள் அவருடைய பதவிக்காலம் மிச்சமிருந்த நிலையில், டிரம்ப் அவரை பணி நீக்கம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அப்படி பணிநீக்கம் செய்தால் அவருடைய ஓய்வூதியம் பாதிக்கப்படும் அபாயம் இருந்தது. இந்நிலையில், எஃப்.பி.ஐ இயக்குனர் ரே மற்றும் துணை இயக்குனர் மெக்கேப் சேர்ந்து ஒரு புரிதலுக்கு வந்து, மீதமுள்ள 6 வாரங்களை அவர் எடுக்கும் விடுமுறையாக கணக்கில் எடுத்துக்கொள்ள ஒப்புக்கொண்டுள்ளனர். 

அதைத் தொடர்ந்து, தனது பதவியை ராஜினாமா செய்வதாக மெக்கேப் தெரிவித்துள்ளார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP