மார்க் ஜூகர்பெர்க் பதவி விலக ஃபேஸ்புக் முதலீட்டாளர்கள் நெருக்கடி 

நியூயார்க் டைம்ஸ் புலனாய்வு செய்தி ஒன்றின் குற்றச்சாட்டை அடுத்து ஃபேஸ்புக் தலைமைச் செயல் அதிகாரியாக இருக்கும் மார்க் ஜூகர்பெர்க் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என அதன் முதலீட்டாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
 | 

மார்க் ஜூகர்பெர்க் பதவி விலக ஃபேஸ்புக் முதலீட்டாளர்கள் நெருக்கடி 

ஃபேஸ்புக் தலைமைச் செயல் அதிகாரியாக இருக்கும் மார்க் ஜூகர்பெர்க் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என அதன் முதலீட்டாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அமெரிக்காவில் குடியரசு கட்சிக்கு சொந்தமான மக்கள் தொடர்பு அரசியல் ஆலோசனை நிறுவனத்தை மார்க் பணியில் அமர்த்தி எதிரிகள் மீது அவதூறு பரப்பியதாக,  நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட புலனாய்வு செய்தி ஒன்று குறிப்பிட்டது. இதையடுத்து மார்க் ஜூகர்பெர்க் பதவி விலக வேண்டும் என முதலீட்டாளர்கள் நெருக்கடி கொடுத்துள்ளனர்.

மார்க் ஜூகர்பெர்க் மறுப்பு 

ஆனால், தன் மீதான குற்றச்சாட்டுகளை மார்க் ஜூகர்பெர்க் மறுத்துள்ளார். தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பாக உடனடியாக செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்த ஜூகர்பெர்க், இந்த நிறுவனம் குறித்து தனக்கு எவ்வித முன்தகவலும் தெரியாது என்று கூறினார்.

நியூயார்க் டைம்ஸில் செய்தி வெளியானதைப் படித்த உடனேயே இது குறித்து எனது நிறுவன அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி குறிப்பிட்ட நிறுவனத்துடன் எதிர்காலத்தில் எவ்வித செயல்பாடுகளையும் வைத்துக் கொள்ளக் கூடாது என கூறியதாக அவர் தெரிவித்தார்.

டிரிலியம் அசெட் மேனெஜ்மென்ட் என்ற நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் ஜோனஸ் குரோன், இது தொடர்பாக கார்டியன் பத்திரிகையில் வெளியிட்ட அறிக்கையில் மார்க் ஜூகர்பெர்க் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இந்நிறுவனம் ஃபேஸ்புக் நிறுவனத்தில் கணிசமான அளவு முதலீடுகளை செய்துள்ளது. 

ஃபேஸ்புக் நிறுவனம் வாஷிங்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மக்கள் தொடர்புத் துறை நிறுவனத்தை பணிக்கு அமர்த்தி அதன் மூலம் நிறுவனத்தின் எதிராளிகள் மற்றும் விமர்சகர்கள் மீது அபாண்டமான குற்றச்சாட்டுகளை கூறுவதற்கு பயன்படுத்தியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP