இனவெறி விளம்பரங்களை பரப்பியதற்கு மன்னிப்பு கேட்கும் பேஸ்புக்

அமெரிக்காவில் நடைபெற்ற இனவெறி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை தொடர்ந்து, இனவெறி தூண்டும் விளம்பரங்களை பரப்பியதற்காக பேஸ்புக் நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.
 | 

இனவெறி விளம்பரங்களை பரப்பியதற்கு மன்னிப்பு கேட்கும் பேஸ்புக்

அமெரிக்காவில் நடைபெற்ற இனவெறி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை தொடர்ந்து, இனவெறி தூண்டும் விளம்பரங்களை பரப்பியதற்காக பேஸ்புக் நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.

அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் நகரில் கடந்த வாரம் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 11 பேர் கொல்லப்பட்டனர். யூதர்களின் வழிபாட்டு தலத்தில் வைத்து நடந்த இந்த சம்பவம், இனவெறி தாக்குதலாக உறுதி செய்யப்பட்டது. சிறுபான்மையினருக்கு எதிராக தொடர்ந்து பல வன்முறை சம்பவங்கள் அமெரிக்காவில் நடந்து வருகின்றன. 

சமூக வலைதளங்களில் சமீப காலமாக, இனவெறியை தூண்டும் பல கருத்துக்களும், விளம்பரங்களும் கட்டுரைகளும் பரவி வருகின்றன. முக்கியமாக வெள்ளையர்களை சிறுபான்மையினர்களாக்க உலகம் முழுவதும் பெரும் கூடுச்சதி நடப்பதாக கூறி பல இனவெறி பதிவுகள் சமீபத்தில் அதிகரித்துள்ளன. யூதர்களுக்கு எதிராக நடந்த தாக்குதலுக்கு இதுபோன்ற பதிவுகள் முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அமெரிக்க செய்தி நிறுவனமான இன்டர்செப்ட், இனவெறி தூண்டும் விளம்பரம் ஒன்றை தயார் செய்து, அதை பேஸ்புக்கில் பரப்ப முயற்சி செய்தது. அந்த விளம்பரத்தை பரிசீலித்த பேஸ்புக், அதை அங்கீகரித்து, இனவெறி பதிவுகளை அதிகம் படிக்கும் 1,68,000 பேருக்கு அதை காட்டியது. எந்த தடையும் இல்லாமல், தங்களால் இதுபோன்ற விளம்பரத்தை பேஸ்புக்கில் பரப்ப முடிகிறது என இன்டர்செப்ட் செய்தி வெளியிட்டது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, பேஸ்புக் மன்னிப்பு கோரியுள்ளது. அந்த பதிவு தொடர்பான அனைத்து விளம்பரங்கள், கட்டுரைகள் தற்போது நீக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே ரஷ்ய ஹேக்கர்கள், கேம்பிரிட்ஜ் அனாலிட்டகா தகவல் திருட்டு, அமெரிக்க தேர்தலில் பரப்பப்பட்ட போலி செய்திகள் என பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய பேஸ்புக், தற்போது இனவெறி சர்சையில் சிக்கியுள்ளது வாடிக்கையாளர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP