22வது முறை எவரஸ்ட் சிகரம் ஏறி புதிய சாதனை!

நேபாளத்தில் வசித்துவரும் கமிரித்தா ஷர்பா என்பவர் எவரஸ்ட் சிகரத்தை அடைந்து சாதனை படைத்துள்ளார்
 | 

22வது முறை எவரஸ்ட் சிகரம் ஏறி புதிய சாதனை!

22வது முறை எவரஸ்ட் சிகரம் ஏறி புதிய சாதனை!

நேபாளத்தில் வசித்துவரும் கமிரித்தா ஷர்பா என்பவர் எவரஸ்ட் சிகரத்தை அடைந்து சாதனை படைத்துள்ளார்.

நேபாளத்தில் வசித்துவரும் கமிரித்தா ஷர்பா என்பவர் சீனாவின் வழியாக எவரெஸ்ட் சிகரத்தை 1994ல் ஏறினார். அப்போது இவருக்கு வயது 24. அதனைத்தொடர்ந்து தற்போது வரையிலும் 21 முறை எவரஸ்ட் சிகரத்தைத் தொட்டு திரும்பியுள்ளார். 8000 அடி உயரமுள்ள கே2, சோ-யூ, ஹொசதே, அன்னபூர்ணா சிகரங்களில் இவர் பலமுறை ஏறியுள்ளார். தற்போது 48 வயதாகும் அவர் 8 ஆயிரத்து 848 அடி உயரமுள்ள எவரஸ்ட் சிகரத்தை 22வது முறையாக அடைந்து புதிய சாதனை படைத்ததுள்ளார். 

22வது முறை எவரஸ்ட் சிகரம் ஏறி புதிய சாதனை!

இதுகுறித்து கமிரித்தா ஹர்பா கூறுகையில், “இந்த சாதனை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இச்சிகரத்தை மீண்டும் தொடவேண்டும் என்ற ஆர்வம் எழுகிறது. அதனை எனது முக்கியமான வேலையாக வைத்துள்ளேன்” என்றார்.

முன்னதாக கடந்த வாரம் சீனாவை சேர்ந்த 70 வயதான கால்கலை இழந்த மலையேறும் வீரரான சியா யோபு எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து சாதனை படைத்தார். இவர் தன்னுடைய 30வது வயதில் எவரஸ்ட் சிகரத்தின் மீது ஏற முயற்சித்த போது இரண்டு கால்களையும் இழந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP