பூகம்பம், எரிமலை வெடிப்பு: பதற்றத்தில் ஹவாய் மக்கள்

அமெரிக்காவின் ஹவாய் மாகாணத்தில் 6.9 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து, அங்குள்ள கிலவேயா எரிமலை நெருப்புப் பிழம்புகளை கக்கத் துவங்கியுள்ளது.
 | 

கடந்த சில தினங்களாக கிலவேயா எரிமலை வெடிக்கத் துவங்கியது. நேற்று ஏற்பட்ட 6.9 ரிக்டர் நிலநடுக்கத்தை தொடர்ந்து, எரிமலையின் தாக்கம் அதிகமாகியுள்ளது. எரிமலையில் இருந்து நெருப்பு பந்துகள் 80 முதல் 100 அடி உயரம் வரை மேலே சென்று விழுவதால், அமெரிக்க பேரிடர் மீட்புப் படையினர் பொதுமக்களை அங்கிருந்து வெளியேற்றி வருகின்றனர். திங்கள் முதல் 500க்கும் மேற்பட்ட சிறிய நில அதிர்வுகள் ஹவாய் கவுன்டியில் ஏற்பட்டுள்ளது. 

அந்த பகுதியின் மேயர், அவசர நிலை பிரகடனப்படுத்தியுள்ளார். பாதிக்கப்பட்ட பகுதியில் சல்ஃபர் டை ஆக்ஸைடு காற்றில் அதிக அளவு கலந்துள்ளதால், அது மக்களுக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. பல வீடுகள் தீப்பிடித்து எரிந்துள்ளன. ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களுக்கு தொடர்ந்து மாற்றப்பட்டு வருகின்றனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP