இந்தோனேசியாவில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவு

இந்தோனேசியாவில் சாம்லகி என்ற பகுதியில் உள்ளூர் நேரப்படி 9.25 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
 | 

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவு

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவு

இந்தோனேசியாவில் இன்று காலை 5.3 ரிக்டர் என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

இந்தோனேசியாவில் சாம்லகி என்ற பகுதியில் உள்ளூர் நேரப்படி இன்று காலை 9.25 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5.3 புள்ளிகள் என பதிவாகியுள்ளது. சாம்லகி பகுதியில் இருந்து வடமேற்கே 226 கி.மீ  தொலைவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது கடலுக்கு அடியில் 163.29 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. சாம்லகி பகுதியின் 100 கிமீ சுற்றளவில் சுமார் 500 மக்கள் இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. நில அதிர்வை உணர்ந்த அப்பகுதி மக்கள்  தெருக்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். 5.3 ரிக்டர் என்பதால் மிதமான நிலநடுக்கம் தான் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP