அப்பாடா... ஒரு வழியா நாடாளுமன்றத்தில் பேசினார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்!

நீண்ட தாமதத்துக்கு பின், ஒருவழியாக அமெரிக்க நாடாளுமன்றத்தில் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்த ஆண்டுக்கான தமது முதல் உரையை இன்று ஆற்றினார்.ஆங்கில புத்தாண்டின் துவக்கத்தில், நாடாளுமன்றத்தில் அதிபர் உரையாற்றுவது மரபு.
 | 

அப்பாடா... ஒரு வழியா நாடாளுமன்றத்தில் பேசினார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்!

ஒரு மாதத்துக்கு மேலான தாமதத்துக்கு பின், ஒரு வழியாக அமெரிக்க நாடாளுமன்றத்தில் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்த ஆண்டுக்கான தமது முதல் உரையை இன்று ஆற்றினார்.

ஆங்கில புத்தாண்டின் துவக்கத்தில், அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் அதிபர் உரையாற்றுவது மரபு. 

ஆனால், இந்த முறை அமெரிக்க- மெக்ஸிகோ எல்லைப் பகுதிகளில் சட்டவிரோத குடியேற்றங்களை தடுக்க தடுப்புச் சுவர் எழுப்பும் அதிபர் ட்ரம்ப்பின் திட்டத்துக்கு நிதி ஒதுக்க,  நாடாளுமன்ற மேலவை மறுத்துவிட்டது.

இதையடுத்து, அரசு துறைகளை முடக்கி அவர் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து, இந்த விவகாரம் முடிவுக்கு வராமல் நாடாளுமன்றத்தில் அதிபர் உரையாற்றக் கூடாது என சபாநாயகர் உத்தரவிட்டார்.

இந்த நிலையில், அரசுத் துறைகள் முடக்கம் அண்மையில் முடிவுக்கு வந்தது. இதையடுத்து, அதிபர் ட்ரம்ப் அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் இன்று உரையாற்றினார்.

அப்போது அவர், "அரசியல் காழ்ப்புணர்ச்சிகள், பழிவாங்கும் எண்ணங்களை மறந்து, நாட்டின் வளர்ச்சிக்காக அனைவரும் ஒன்றிணைந்து செயல்படவேண்டும் என எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தார்.

மெக்ஸிகோ எல்லைப் பகுதியில் தடுப்புச் சுவர் எழுப்பும் முயற்சி மீண்டும் மேற்கொள்ளப்பட்டுள்ளது தமது தலைமையிலான அரசின் குறிப்பிடத்தக்க சாதனைகளுள் ஒன்று.

வடகொரிய அதிபர் கிம்மை வரும் 27-ஆம் தேதி, வியாட்நாமில் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச உள்ளேன்" என அதிபர் ட்ரம்ப் பேசினார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP