பத்திரிக்கையாளர்களை விரோதிகளாக்க வேண்டாம்: ட்ரம்ப்புக்கு நியூயார்க் டைம்ஸ் அறிவுரை

பத்திரிகையாளர்களுக்கு நாட்டுப்பற்று இல்லை என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளது குறித்து அந்நாட்டின் நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை அதிருப்தி தெரிவித்துள்ளது.
 | 

அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றது முதல் அவர் குறித்த விவகாரங்களை பத்திரிகைகள் கடுமையாக அம்பலப்படுத்துவதும் அவர் அதற்கு முரணாக பேசுவதும் வாடிக்கையாகவே உள்ளது. இந்த நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்ட ட்ரம்ப், தமது நிர்வாகம் குறித்து வெளியாகும் 90 சதவீத செய்திகள் எதிர்மறையாகவே இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

பத்திரிக்கையாளர்களை விரோதிகளாக்க வேண்டாம்: ட்ரம்ப்புக்கு நியூயார்க் டைம்ஸ் அறிவுரை

"ஊடகங்கள் மீதான நம்பிக்கை முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மிகவும் குறைந்து விட்டது.  இறக்கும் தருவாயில் உள்ள செய்தித் துறைக்காக, நாட்டுக்காக போராடுவதை நான் நிறுத்தப் போவதில்லை.  நாட்டு எல்லையில் சுவர் எழுப்ப நிதி ஒதுக்க உறுப்பினர்கள் அனுமதி கொடுக்காவிட்டால் அதற்காக அரசை முடக்க தான் ஊடகங்கள் ஆர்வமாக உள்ளனர்" என்று எச்சரித்திருந்தார். 

இந்த நிலையில் அமெரிக்காவில் வெளியாகும் நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை, ட்ரம்ப்புக்கு பதில் தரும் விதமாக கட்டுரை வெளியிட்டுள்ளது. அதில், "ட்ரம்ப் தொடர்பான செய்திகள் 90 சதவீதம் எதிர்மறை அல்லது தவறானவை எனக் கூறி தப்பிப்பதே அவரது தவறு. அதற்கும் மேல், பத்திரிகையாளர்களை நாட்டின் எதிரிகளாக முத்திரை குத்த நினைப்பது பெரும் தவறு. இதன் மூலம் அவர் வன்முறையை தூண்டுகிறார். 

அவரது கொள்கைகளால் பத்திரிகையாளர்களுக்கு  மட்டுமல்ல அனைத்து அமெரிக்க மக்களுக்குமே ஆபத்து தான். இதனை விமர்சித்தால் அவரால் ஏற்க முடியாது தான். ஏற்க கூடியவர் மக்கள் விரோத கொள்கை முடிவுகளை எடுக்கவே மாட்டார் " என்று அந்தப் பத்திரிகையின் மூத்த பத்திரிகையாளர் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP