குற்றவாளியை போல நடந்து கொள்ளாதீர்கள்: ட்ரம்புக்கு எச்சரிக்கை

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனக்கு எதிராக நடந்து வரும் விசாரணையை நிறுத்த உள்ளதாக கூறப்படும் நிலையில், அந்த முடிவு அவருக்கே எதிராக திரும்பும் என அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் எச்சரித்து வருகின்றனர்.
 | 

குற்றவாளியை போல நடந்து கொள்ளாதீர்கள்: ட்ரம்புக்கு எச்சரிக்கை

குற்றவாளியை போல நடந்து கொள்ளாதீர்கள்: ட்ரம்புக்கு எச்சரிக்கை

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனக்கு எதிராக நடந்து வரும் விசாரணையை நிறுத்த உள்ளதாக கூறப்படும் நிலையில், அந்த முடிவு அவருக்கே எதிராக திரும்பும் என அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் எச்சரித்து வருகின்றனர்.

அமெரிக்க அதிபர் தேர்தலில், ரஷ்ய ஹேக்கர்கள் குறுக்கிட்டதாக அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். வேட்பாளர் ஹிலாரி க்ளிண்டனுக்கு எதிராக அவர்கள் செயல்பட்டதோடு, ட்ரம்புக்கு ஆதரவாக பல பொய் செய்திகளை வெளியிட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. அந்த ஹேக்கர்களுடன் சேர்ந்து ட்ரம்பின் தேர்தல் பணியாளர்கள் கூட்டு முயற்சி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இது தேசத்துரோகத்துக்கு இணையான குற்றச்சாட்டு என்பதால், இதுகுறித்து விசாரணை செய்ய சிறப்பு கமிஷன் ஒன்று நியமிக்கப்பட்டது. 

முன்னாள் எஃப்.பி.ஐ தலைவர் ராபர்ட் முல்லர் இந்த கமிஷனின் தலைவராக நியமிக்கப்பட்டார். அவர் செய்த விசாரணையில், ட்ரம்பின் தேர்தல் தலைமை அதிகாரியாக பணியாற்றி வந்த பால் மேனபோர்ட், அவரது உதவியாளர் ரிக் கேட்ஸ், ட்ரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் பிளின், ட்ரம்புடன் தேர்தலில் பணியாற்றிய ஜார்ஜ் பாபடாபோலஸ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.குற்றவாளியை போல நடந்து கொள்ளாதீர்கள்: ட்ரம்புக்கு எச்சரிக்கை

மேனபோர்ட் தவிர மற்ற 3 பேர் தற்போது முல்லரின் விசாரணையில் அப்ரூவராக மாறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த கட்டமாக, ட்ரம்பின் மருமகன் ஜேரட் குஷ்னர் மீது வழக்கு தொடுக்கப்பட உள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், ட்ரம்புக்கு சொந்தமான நிறுவனங்களின் பரிவர்த்தனைகள் குறித்து முல்லர் விசாரித்து வருகிறார். இதனால் ட்ரம்ப் கடும் கோபத்துக்கு ஆளானதாக தெரிகிறது. 

அதனால், விசாரணை கமிஷனை முடக்க ட்ரம்ப் முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே, எதிர்க்கட்சி மட்டுமல்லாமல் ட்ரம்பின் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களே, கமிஷனின் விசாரணையை நிறுத்த ட்ரம்ப் முயற்சி செய்யக்கூடாது என எச்சரித்திருந்தனர்.

குற்றவாளியை போல நடந்து கொள்ளாதீர்கள்: ட்ரம்புக்கு எச்சரிக்கை

இந்நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில் ட்ரம்ப், இந்த விசாரணை தேவையே இல்லை என கூறினார். ட்ரம்பின் வழக்கறிஞர் ஜான் டௌடு ஒரு தொலைக்காட்சியில் பேசியபோது, "முல்லரின் விசாரணை கமிஷன் உடனடியாக டிஸ்மிஸ் செய்யப்பட வேண்டும்" என கூறினார். இதனால் கடும் அதிருப்தியடைந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ட்ரம்ப்பை எச்சரித்து வருகின்றனர். செனட் உறுப்பினர் லிண்ட்சி க்ரஹாம், "முல்லரின் விசாரணையை ட்ரம்ப் தடுக்க முயன்றால், அது அவரது பதவிக்கே முடிவாக அமையும்" என எச்சரித்துள்ளனர். 

ட்ரம்ப் கட்சியின் மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினர் ட்ரே கவுடி பேசியபோது, "அதிபர் ட்ரம்ப் குற்றவாளி போல பேசுவதை முதலில் நிறுத்த வேண்டும். விசாரணை முழுமையாக முடிந்தால் தான் உண்மை எதுவென்று தெரியும்" என கூறினார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP