டொனால்ட் ட்ரம்ப்பின் தேர்தல் குழு தலைவருக்கு 4 ஆண்டுகள் சிறை

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் தேர்தல் பிரச்சார குழு தலைவராகவும், அவரின் நெருங்கிய ஆலோசகராகவும் செயல்பட்ட பால் மேனபோர்ட்டுக்கு வரி மோசடி வங்கி மோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் 47 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
 | 

டொனால்ட் ட்ரம்ப்பின் தேர்தல் குழு தலைவருக்கு 4 ஆண்டுகள் சிறை

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் தேர்தல் பிரச்சார குழு தலைவராகவும், அவரின் நெருங்கிய ஆலோசகராகவும் செயல்பட்ட பால் மேனபோர்ட்டுக்கு வரி மோசடி, வங்கி மோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் 47 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

2016ல் அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப் போட்டியிட்ட போது, அவரது தேர்தல் குழுவின் தலைவராக பணியாற்றிய பால் மேனபோர்ட், பல்வேறு நிதி மோசடி குற்றச்சாட்டுகளில் சிக்கிய பின்னர், தேர்தல் குழுவில் இருந்து நீக்கப்பட்டார். ஆனால், ட்ரம்ப்புக்கு சொந்தமான ட்ரம்ப் டவரில், அவரது இல்லத்துக்கு அருகேயே தங்கியிருந்த மேனபோர்ட் , தொடர்ந்து அவருக்கு ஆலோசனை வழங்கி வந்ததாகவும், தேர்தலில் வெல்ல உதவியதாகவும் கூறப்பட்டது. 

உக்ரைன் நாட்டின் அதிபர் தேர்தலில் மோசடி வேலைகளில் ஈடுபட்டது, வங்கிகளிடம் மோசடி செய்தது, அமெரிக்காவில் வரி மோசடியில் ஈடுபட்டது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளில் அவர் மீது வழக்கு நடைபெற்று வந்தது. ட்ரம்ப்புக்கு எதிராக அவர் வாக்குமூலம் எதுவும் அளிக்காததால், அவருக்கு பொதுமன்னிப்பை வழங்க ட்ரம்ப் ஆலோசனை நடத்தி வந்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில், மேனபோர்ட்டுக்கு, குறைந்தபட்ச தண்டனையாக 47 மாதங்கள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்து வந்த சிறப்பு கமிட்டி, மேனபோர்டுக்கு 19 முதல் 24 ஆண்டுகள் சிறைத் தண்டனை கோரியது குறிப்பிடத்தக்கது.

அடுத்த வாரம் தீர்ப்பளிக்கப்படவுள்ள மற்றொரு வழக்கில், மேனபோர்ட்டுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP