சீனாவுடனான வர்த்தக போரை தற்காலிகமாக ஒத்திவைத்த டொனால்ட் ட்ரம்ப்!

சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நடைபெற்று வந்த வர்த்தகப் போரில், சீனா பொருட்கள் மீது அடுத்தகட்ட வரிகளாக மார்ச் 1ம் தேதி முதல் விதிக்க இருந்ததாக கூறிய ட்ரம்ப், அதை தற்போது ஒத்திவைத்துள்ளார்.
 | 

சீனாவுடனான வர்த்தக போரை தற்காலிகமாக ஒத்திவைத்த டொனால்ட் ட்ரம்ப்!

சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நடைபெற்று வந்த வர்த்தகப் போரில், சீனா பொருட்கள் மீது அடுத்தகட்ட வரிகளாக மார்ச் 1ம் தேதி முதல் விதிக்க இருந்ததாக கூறிய ட்ரம்ப், அதை தற்போது ஒத்திவைத்துள்ளார்.

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையேயான வர்த்தக ஒப்பந்தங்கள், அமெரிக்காவுக்கு மிகவும் கேடு விளைவிக்கும் விதமாக உள்ளதாக அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தார். சீன உற்பத்தி பொருட்கள் மீது, புதிய வரிகளை சுமத்த அவர் திட்டமிட்டார். பொருளாதார வல்லுனர்கள் இந்த திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருந்தாலும், அதிபர் ட்ரம்ப், சீனப் பொருட்கள் மீது கூடுதல் வரிகளை விதிக்க, பதிலுக்கு சீனாவும் அமெரிக்க பொருட்கள் மீது கூடுதல் வரியை விதித்தது. சுமார் 200 பில்லியன் டாலர்கள் (ரூ.14,000 கோடி) மதிப்பிலான பொருட்கள் மீது வரி விதிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அமெரிக்காவுடன் வர்த்தக போர் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டது. கடந்த சில வாரங்களாக இரு தரப்புக்கும் இடையே சுமூகமான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக கூறப்பட்டது. 

மார்ச் 1ம் தேதிக்குள் புதிய வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால், மீண்டும் 200 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான சீன பொருட்கள் மீது கூடுதல் வரி விதிக்கப்படும் என ட்ரம்ப் எச்சரித்திருந்தார்.

இந்தநிலையில், பேச்சுவார்த்தைகளில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் சீனாவின் மீது விதிக்கப்பட உள்ள புதிய வரிகளை ஒத்திவைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் ட்விட்டரில் வெளியிட்ட அறிக்கையில், "பேச்சுவார்த்தைகள் மிகவும் நல்லவிதமாக நடந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக மார்ச் 1ம் தேதி சுமத்தப்பட இருந்த புதிய வரிகளை ஒத்தி வைக்கிறேன். இரண்டு தரப்பிலும், தொடர்ந்து நல்லவிதமாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தால், நானும் சீன அதிபர் ஜி-யும் புளோரிடாவில் உள்ள எனது ரிசார்ட்டில், இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி, ஒப்பந்தம் கையெழுத்திடுவோம்" என்று கூறினார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP