இந்திய பொருட்கள் மீது கூடுதல் வரி விதிக்கிறாரா டொனால்ட் டிரம்ப்..?

ஹார்லி டேவிட்சன் பைக் போன்ற அமெரிக்க பொருட்கள் மீது இந்தியா தொடர்ந்து கூடுதல் வரிகளை விதித்து வருவதாக குற்றம்சாட்டிய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ர்மப், இந்திய பொருட்கள் மீது பதிலுக்கு வரி விதிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
 | 

இந்திய பொருட்கள் மீது கூடுதல் வரி விதிக்கிறாரா டொனால்ட் டிரம்ப்..?

ஹார்லி டேவிட்சன் பைக் போன்ற அமெரிக்க பொருட்கள் மீது இந்தியா தொடர்ந்து கூடுதல் வரிகளை விதித்து வருவதாக குற்றம்சாட்டிய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ர்மப், இந்திய பொருட்கள் மீது பதிலுக்கு வரி விதிக்க உள்ளதாக கூறப்படுகிறது.  

அமெரிக்க அதிபரான பிறகு இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் அமெரிக்க பொருட்கள் மீது இந்திய அரசு கூடுதல் வரி விதித்து வருவதை பற்றி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார் ட்ரம்ப். ஹார்லி டேவிட்ஸன் மோட்டார்சைக்கிள் இறக்குமதி மீது 100 சதவீதம் வரி விதிக்கப்பட்ட நிலையில், அதை குறைக்க வேண்டும் என ட்ரம்ப் வலியுறுத்தி வந்தார். இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் மீது அமெரிக்காவில் குறைந்த வரி விதிக்கப்பட்டு வரும் நிலையில், இந்தியா நியாயமற்ற முறையில் நடந்து கொள்வதாக ட்ரம்ப் கூறி வந்தார்.

மற்ற நாடுகள் மீது பதிலுக்கு புதிய வரிகள் விதிப்பது பற்றி அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் வெள்ளை மாளிகையில் ட்ரம்ப் ஆலோசனை நடத்தினார். அப்போது, பல்வேறு பொருட்களை அமெரிக்காவில் இறக்குமதி செய்ய குறைந்த வரியே விதிக்கப்படும் நிலையில், மற்ற  நாடுகள் அமெரிக்க பொருட்கள் மீது கூடுதல் வரி வசூலிப்பதை பற்றி ட்ரம்ப் பேசினார். இதனிடையே, இந்தியாவை பற்றி பேசிய ட்ரம்ப் "எடுத்துக்காட்டாக, அமெரிக்க மதுபானம் மீது இந்தியா 150% வரி விதிக்கிறது. அவர்கள் செய்யும் மதுபானங்களை இங்கே விற்க நாம் எந்த வரியும் விதிப்பதில்லை. ஆனால் நமது பொருட்கள் மீது 150% வரி விதிக்கிறார்கள். மற்றபடி இது நல்ல ஒப்பந்தம்தான்" என்று கூறினார்.

அதேபோல, ஹார்லி டேவிட்சன் குறித்து தான் பேசியதை தொடர்ந்து இந்திய அரசு வரியை குறைத்துள்ளதாகவும் ட்ரம்ப் தெரிவித்தார். "மோட்டார் வாகனங்களை எடுத்துக்கொள்ளுங்கள், இந்தியா 100 சதவீத வரி விதித்து வந்த நிலையில், அதை 50 சதவீதமாக குறைத்துள்ளார்கள். நான் இரண்டு நிமிடங்கள் தான் அதை பற்றி நான் பேசினேன். அதற்கே 50 சதவீதம் குறைத்து விட்டார்கள். ஆனால் 50% என்பதும் மிக அதிகமே. நாம் 2.4% தான் விதிக்கிறோம்" என்றும் கூறினார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP