ஐநா-வில் அசிங்கப்பட்ட டொனால்ட் ட்ரம்ப்!

ஐநா பொதுக்கூட்டத்தில் டொனால்ட் ட்ரம்ப் கலந்துகொண்டு உரையாற்றியபோது, அமெரிக்க சரித்திரத்திலேயே தனது அரசு தான் அதிகபட்ச சாதனைகளை புரிந்துள்ளதாக மார்தட்டிக் கொள்ள, அரங்கத்தில் இருந்த மற்ற நாட்டு தலைவர்கள் சிரித்தனர்.
 | 

ஐநா-வில் அசிங்கப்பட்ட டொனால்ட் ட்ரம்ப்!

ஐநா பொதுக்கூட்டத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கலந்துகொண்டு உரையாற்றியபோது, அமெரிக்க சரித்திரத்திலேயே தனது அரசு தான் அதிகபட்ச சாதனைகளை புரிந்துள்ளதாக மார்தட்டிக் கொள்ள, அரங்கத்தில் இருந்த மற்ற நாட்டு தலைவர்கள் அனைவர்களும் சிரித்தனர்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐநா பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அதிபர் ட்ரம்ப், தனது வழக்கமான பாணியில், தற்பெருமை பேசிக் கொண்டிருந்தார். தனது தலைமையிலான அரசு பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளதாக கூறிய ட்ரம்ப், "அமெரிக்க சரித்திரத்திலேயே, எனது அரசு தான் இரண்டே ஆண்டுகளில் அதிகபட்ச சாதனைகளை புரிந்துள்ளது" என கூறினார். இதை அவர் கூறிமுடிக்க, அரங்கத்தில் இருந்த சர்வதேச தலைவர்கள் சிரிக்கத் துவங்கினர். அவர்கள் சிரித்ததை பார்த்து பேச்சை நிறுத்திய ட்ரம்ப், "இதற்கு இப்படிப்பட்ட எதிர்வினை கிடைக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை" என சங்கடமாக கூறினார். 

ட்ரம்ப்பின் பேச்சுக்கு ஐநா கொடுத்த மோசமான வரவேற்பை வைத்து நெட்டிசன்கள் அவரை சமூக வலைத்தளங்களில் வறுத்தெடுத்து வருகின்றனர். "உலகின் காமெடி பீஸாகி விட்டார் ட்ரம்ப்" என விமர்சித்து பலர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP