சிறுவனுக்கு 5 உறுப்புகள் மாற்றம் செய்து மருத்துவர்கள் சாதனை

பிரிட்டனைச் சேர்ந்த ஏழு வயது சிறுவனுக்கு கல்லீரல், சிறுநீரகம் என ஐந்து முக்கிய உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
 | 

பிர்மிங்காமில் வசித்து வரும் 7 வயது சிறுவன் ஜே கிரவுச்சுக்கு பிறந்தது முதல் உணவு விழுங்குவதில் சிரமம் ஏற்பட்டு வந்தது. மருத்துவ பரிசோதனையில் சிறுவனின் இரு சிறுநீரகங்கள், கல்லீரல், சிறு குடல் ஆகியவற்றில் பாதிப்பு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த உறுப்புகளை அகற்றவிட்டு, மாற்று அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே சிறுவன் உயிர் பிழைக்க முடியும் என மருத்துவர்கள் தெரிவித்ததால், பெற்றோர் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.

சிறுவனுக்கு 5 உறுப்புகள் மாற்றம் செய்து மருத்துவர்கள் சாதனை

எனினும் மருத்துவர்களின் முயற்சியால், அவரது உடலுக்கு பொருத்தமான இந்த ஐந்து உறுப்புகளும் கிடைத்ததை அடுத்து, மாற்று அறுவை சிகிச்சை மூலம் அவை வெற்றிகரமாக பொருத்தப்பட்டது. இதனால் சிறுவனால், சக மனிதர்களை போல சகஜமாக உணவு சாப்பிட முடிகிறது. இதனால் சிறுவனின் தாய் மிகுந்த மகிழ்ச்சியில் திளைத்து வரு‌கிறார். மேலும் தனது மகனின் உயிரை காப்பாற்றிய மருத்துவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP