பயப்படமாட்டோம், பதிலடி கிடைக்கும்: சவுதி அமெரிக்காவிற்கு எச்சரிக்கை!

சவுதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கஷோகிஜி காணாமல் போன விவகாரத்தில் எந்தப் பொருளாதார மற்றும் அரசியல் மிரட்டல்களுக்கும் தங்கள் நாடு அஞ்சாது எனவும் அதன் விளைவு எண்ணெய் விலையில் வெளிப்படும் என சவுதி எச்சரித்துள்ளது.
 | 

பயப்படமாட்டோம், பதிலடி கிடைக்கும்: சவுதி அமெரிக்காவிற்கு எச்சரிக்கை!

பத்திரிகையாளர் ஜமால் கஷோகிஜி காணாமல் போன விவகாரத்தில், அமெரிக்கா விடுத்துள்ள எச்சரிக்கைக்கு, பதில் கொடுக்கும் விதமாக,  எவ்விதமிரட்டல்களுக்கும் நாங்கள் அஞ்ச மாட்டோம் எனவும்,  ஏதாவது நடவடிக்கை எடுத்தால் அதன் விளைவு எண்ணெய் விலையில் வெளிப்படும் என்றும் சௌதி அரேபிய அரசு வெளிப்படையாக  அறிவித்துள்ளது. 

அமெரிக்காவில் வசித்து வந்தவர் சௌதி அரேபிய  நாட்டைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கஷோகிஜி. இவர் துருக்கி நாட்டின் தலைநகர் இஸ்தான்புலில் உள்ள  அரேபிய நாட்டின் தூதரகத்துக்கு ஆவணம் ஒன்றை பெறச் சென்றார். அதன் பின் அவரைக் எங்கும் காண இயலவில்லை. அதையடுத்து பத்திரிகையாளர் ஜமால், அரேபிய தூதரகத்தில் வைத்தே கொல்லப்பட்டிருக்கலாம் எனவும், அதற்கான ஆதாரம் தங்களிடம் உள்ளதாகவும் துருக்கி நாட்டு அரசு கருத்து தெரிவித்திருந்தது. ஆனால் அதனை சௌதி தூதரகம் மறுத்து வருகிறது. 

யார் இவர்? - ஜமால் கஷோகிஜி சௌதி நாட்டை ஆண்டு வரும் அரச குடும்பத்தின் ஆலோசகராக  பதவி வகித்து வந்தார். அவர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டை அடுத்து அந்த பதவியிலிருந்து விலகி அமெரிக்காவில் குடி புகுந்தார். அதன் தொடர்ச்சியாக சௌதி அரச குடும்பத்தையும், அரசையும் விமர்சித்து எழுதி வந்தார். இத்தகைய சூழ்நிலையில் அவரது பாஸ்போர்ட் தொடர்பான விவகாரத்தை சரி செய்யும் நோக்கில் துருக்கி நாட்டின் தலைநகர் இஸ்தான்புலில் உள்ள சௌதி அரேபிய தூதரகத்துக்கு கமால் கடந்த இரண்டாம் தேதி சென்றிருந்தார். அதன் பிறகு அவரைக் காணவில்லை. இதையடுத்தே துருக்கி நாட்டு அரசு ஜமால் சௌதி தூதரகத்தில் வைத்து கொள்ளப்பட்டதற்கான ஆதாரம் உள்ளது என அறிவித்தது. அதையடுத்து 

பத்திரிகையாளர் ஜமால் கஷோகிஜி மரணத்துக்கு சௌதி அரேபிய அரசுதான் காரணம் என்று கண்டறியப்பட்டால், அமெரிக்கா அந்நாட்டு அரசுக்கு கடுமையான தண்டனையை வழங்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்தார். அதோடு சவுதி தலைநகர் ரியாதில் இம்மாதம் நடைபெற இருக்கும் மாநாட்டில் கலந்து கொள்வதில்லை என அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் முடிவெடுத்துள்ளன. 

அமெரிக்க அரசின் கருவூலச் செயலர் ஸ்டீவன் மனூஷ், மற்றும் பிரிட்டனின் சர்வதேச வர்த்தகச் செயலர் லியம் ஃபாக்ஸ் இந்த மாநாட்டை புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. 

இந்த மாநாடு சௌதி இளவரசர் சல்மானின் ஆட்சியை கவுரவப்படுத்தவும் முதலீட்டை ஈர்க்கும் நோக்கத்தோடும் நடத்தப்பட உள்ளது. இதில் சௌதியின் நட்பு நாடுகள் பங்கேற்காமல் போனால் பின்னடைவாக அமையும் எனக் கருதப்படுகிறது. 

இந்த நிலையில் பொருளாதார தடைகள், அரசியல் அழுத்தங்கள், அச்சுறுத்தல்கள் மூலம் எங்களை சிறுமைப்படுத்தும் முயற்சிகளை நாங்கள் என்றுமே பொருட்படுத்த மாட்டோம்.  என்பதில் உறுதியாக உள்ளோம். எங்கள் மீது  அமெரிக்கா நடவடிக்கை எடுத்தால், அதைவிட பெரிதாக பதில் நடவடிக்கையை நாங்கள் எடுப்போம். எங்கள் பலத்தை நாங்கள் அறிந்துள்ளோம் எனவும், எங்கள் பதில் எண்ணை விலையில் தெரிய வரும் எனவும் சௌதி அரேபிய அரசு அறிவித்துள்ளது.  

தொடர்புடையவை: 'சவுதிக்கான தண்டனை கடுமையாக இருக்கும்'- பத்திரிகையாளர் விவகாரத்தில் ட்ரம்ப் எச்சரிக்கை

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP