அப்படியா சொன்னேன்? - கண்டனங்களை அடுத்து புடின் விவகாரத்தில் ட்ரம்ப் விளக்கம்

2016ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்ய அதிபர் புடினின் தலையீடு இருந்தது என்பதை தான் மறுக்கவில்லை என்றும் தனது பேச்சின் சாராம்சம் தவறுதலாக புரிந்துகொள்ளப்பட்டதாகவும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விளக்கம் அளித்துள்ளார்.
 | 

அப்படியா சொன்னேன்? - கண்டனங்களை அடுத்து புடின் விவகாரத்தில் ட்ரம்ப் விளக்கம்

2016ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்ய அதிபர் புடினின் தலையீடு இருந்தது என்பதை தான் மறுக்கவில்லை என்றும் தனது பேச்சின் சாராம்சம் தவறுதலாக புரிந்துகொள்ளப்பட்டதாகவும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விளக்கம் அளித்துள்ளார். 

ஸ்காட்லாந்து உச்சி மாநாட்டில் ரஷ்ய அதிபர் புடினுக்கு இணக்கமாக பேசிய ட்ரம்புக்கு அவரது குடியரசுக் கட்சி உள்ளிட்ட அனைத்து அமெரிக்கத் தரப்பிலிருந்தும் விமர்சனம் எழுந்திருக்கும் சூழலில் இத்தகைய விளக்கத்தை ட்ரம்ப் அளித்துள்ளார். 

ஸ்காட்லாந்து உச்சி மாநாடு செய்தியாளர் சந்திப்பு உரையாடல்களின் எழுத்தாக்கத்தை தாம் படித்ததாகவும், அதில் அவர் சொல்ல வந்ததது குறித்த விளக்கம் அளிக்க விரும்புவதாகவும் கூறியுள்ள ட்ரம்ப், "அந்த செய்தியாளர் சந்திப்பில் நான் புடின் குறித்து பேசிய வாக்கியத்தில் 'வுட்நாட்' என்று சொல்வதற்குப் பதிலாகத் 'வுட்' என்று தவறுதலாக கூறிவிட்டேன். மேலும், ரஷ்யா அப்படி செய்திருக்காது என்பதற்கான காரணம் எதுவும் எனக்குத் தெரியவில்லை" அல்லது "அது ஏன் ரஷ்யாவாக இருக்காது?" என்பது போன்ற சொலவடை வாக்கியத்தை தான் பயன்படுத்தினேன்.

2016 தேர்தலில் ரஷ்யா தலையிட்டதாக நம் உளவு நிறுவனங்கள் முடிவுக்கு வந்துள்ளதை நான் ஏற்கிறேன். வேறு யாரும்கூட இதைச் செய்திருக்கலாம். அவ்வாறு செய்ய நிறைய பேர் இருக்கிறார்கள்" என்றும் ட்ரம்ப்  தெரிவித்தார்.

புடினுடன் கூட்டு செய்தியாளர் சந்திப்பில் கூறியது என்ன?

ரஷ்ய அதிபர் புடின் ட்ரம்புடன் இணைந்து பயங்கரவாதத்தை எதிர்க்கபோவதாகவும் தங்கள் நாடுகளுக்குள் இருந்த பனிப்போர் கடந்த காலமானது என்ற வகையிலும் பேசினார். தொடர்ந்து பேசிய ட்ரம்ப், "2016ல் நடந்த அமெரிக்கத் தேர்தலில் தலையிடவில்லை என்று அதிபர் புடின் தெரிவித்திருக்கிறார். அனைத்து அமெரிக்க உளவு நிறுவனங்களும் ரஷ்யா தலையிட்டதாக முடிவுக்கு வந்துள்ளன" என்றார்.

அப்போது குறுக்கிட்ட செய்தியாளர், இதில் யார் சொல்வதை நீங்கள் நம்புகிறீர்கள்" என்று கேட்டார். அவருக்குப் பதில் அளித்த ட்ரம்ப், "என்னுடைய அதிகாரிகள் என்னிடம் வந்து ரஷ்யா செய்ததாக கூறினார்கள். அதிபர் புடின் ரஷ்யா அப்படிச் செய்யவில்லை என்றார். ரஷ்யா, அப்படிச் செய்திருக்கும் என்று கூறுவதற்கான காரணம் ஏதும் எனக்குத் தெரியவில்லை" என்று கூறினார்.

அமெரிக்காவுடன் நீண்ட காலமாக விரோத போக்குடைய ரஷ்யாவுக்கு பணிந்து, தனது சொந்த நாட்டு உளவு நிறுவனங்களை மறுத்து பேசியதன் விளைவாக ட்ரம்புக்கு எதிரான கருத்து ஓங்கி இருக்கிறது. அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் ட்ரம்பின் கருத்தை மிகத் தீவிரமாக எதிர்க்கின்றனர். 

ட்ரம்பின் முக்கிய ஆதரவாளரான நீயூட் ஜிங்க்ரிச், ஹெல்கின்சியில் ட்ரம்ப் கூறிய கருத்துகள், "அவரது அதிபர் பதவிக்காலத்தின் மிக மோசமான தவறு" என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP