போதை பொருள் கடத்துபவர்களுக்கு மரண தண்டனை: டிரம்ப் யோசனை

போதைப் பொருள் கடத்துபவர்களுக்கு மரண தண்டனை வழங்கி, உலகின் மற்ற நாடுகளுக்கு எல்லாம் அமெரிக்கா முன்னோடியாக விளங்க வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் டிரம்ப் யோசனை தெரிவித்துள்ளார்.
 | 

போதை பொருள் கடத்துபவர்களுக்கு மரண தண்டனை: டிரம்ப் யோசனை

போதை பொருள் கடத்துபவர்களுக்கு மரண தண்டனை: டிரம்ப் யோசனைபோதைப் பொருள் கடத்துபவர்களுக்கு மரண தண்டனை வழங்கி, உலகின் மற்ற நாடுகளுக்கு எல்லாம்  அமெரிக்கா முன்னோடியாக விளங்க வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் டிரம்ப் யோசனை தெரிவித்துள்ளார்.

அதிபர் மாளிகையில் போதைப் பொருள் விழிப்புணர்வு தொடர்பான மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த கூட்டத்தில் டிரம்ப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

"அமெரிக்காவில் போதை பொருள் வைத்திருப்பவர்கள், கடத்துபவர்கள் என அனைவருக்கும் மிகக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும். மிகக் கடுமையான தண்டனை வழங்கப்படும் நாடுகளில் அமெரிக்காவைக் காட்டிலும் மிகமிகக் குறைவாகவே போதைப் பொருள் பயன்பாடு உள்ளது. நாமும் அதேபோல் கடுமையான தண்டனை வழங்க வேண்டும். நாம் வழங்கும் தண்டனை மற்ற நாடுகளுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும்" என்றார். 

மேலும் அவர் பேசுகையில், வலி நிவாரணி மருந்து தயாரிக்கும் நிறுவனங்களும் கூட போதைப் பொருட்கள் கடத்தலுக்கு துணை செல்வதாக குறிப்பிட்ட அவர்கள், அத்தகைய நிறுவனங்கள் மீது சட்டரீதியாக வழக்கு தொடரப்படும் என்றார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP