சொந்த கிராமத்தில் பாட்டியுடன் நடனம்: ஒபாமாவின் வைரல் வீடியோ!

கென்யாவில் உள்ள தனது சொந்தக் கிராமத்துக்குச் சென்ற முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா, அங்கு தன் பாட்டியுடன் சேர்ந்து நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
 | 

சொந்த கிராமத்தில் பாட்டியுடன் நடனம்: ஒபாமாவின் வைரல் வீடியோ!

கென்யாவில் உள்ள தனது சொந்தக் கிராமத்துக்குச் சென்ற முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா, அங்கு தன் பாட்டியுடன் சேர்ந்து நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

முன்னாள் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவுக்கு கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவில் உள்ள கொகிலோ என்ற கிராமம் தான் பூர்வீகம். கொகிலா கிராமத்தில் ஒபாமாவின் பாட்டி, சகோதரி மற்றும் அவர்களது குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் அமெரிக்க அதிபர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ததிலிருந்து ஒபாமா, முதல் முறையாக தனது சொந்த கிராமத்துக்கு சென்றுள்ளார். ஒபாமா மற்றும் மிச்செல் வருகையால் அந்த கிராமமே உற்சாக கோலத்தில் காணப்பட்டது. 

ஒபாமா வரும் செய்தியை அறிந்த மக்கள் அவரைப் பார்ப்பதற்காக, அவரது பாட்டி வீட்டிற்கு திரண்டிருந்தனர். இதனிடையே ஆப்பிரிக்கா வந்திறங்கிய ஒபாமா, கொகிலோ கிராமத்தில் தன் சகோதரி அவுமா ஒபாமா ஆரம்பித்துள்ள இளைஞர் நல மற்றும் விளையாட்டுப் பயிற்சி மையத்தைத் தொடங்கிவைத்தார். 

இந்த நிகழ்ச்சியில் அப்பகுதி மக்களின் பாரம்பரிய இசை ஒலிபரப்பப்பட்டது. அந்த இசைக்கு ஒபாமா, திடீரென எழுந்து நடனமாடிய சம்பவம் அங்கு கூடியிருந்த மக்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.  ஒபாமா நடனமாடத் தொடங்கிய, பின்னர் தனது பாட்டியை அழைத்து வந்து அவரோடு சேர்ந்து நடனமாடச் செய்து மகிழ்ந்தார். கென்யா தொலைக்காட்சி வெளியிட்டிருக்கும் அந்த வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP