நடனமாடிக் கொண்டே அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்: மூளைச்சாவு அடைந்த நோயாளி

அமெரிக்காவில் கையில் கத்தியுடன் நடனமாடிக்கொண்டே அறுவை சிகிச்சை செய்த காஸ்மெடிக் மருத்துவரால், நோயாளி மூளைச்சாவு அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 | 

நடனமாடிக் கொண்டே அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்: மூளைச்சாவு அடைந்த நோயாளி

அமெரிக்காவில் கையில் கத்தியுடன் நடனமாடிக்கொண்டே அறுவை சிகிச்சை செய்த காஸ்மெடிக் மருத்துவரால், நோயாளி மூளைச்சாவு அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில் இது தான் அந்த மருத்துவருக்கு வாடிக்கை என அம்பலமாகியுள்ளது.

அமெரிக்காவின் ஜார்ஜியா பகுதியில் வசிப்பவர் விண்டெல். தோல் மருத்துவரான இவர் நோயாளிகளுக்கு அழகுக்காக செய்யப்படும்  காஸ்மெடிக் அறுவை சிகிச்சை செய்யும் வீடியோக்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். 

இவரது செயலில் கொடுமை என்னவென்றால் நோயாளிகள் மயக்க நிலையில் இருக்கும்போது அறுவை சிகிச்சைக்கு நடுவே நடனம் ஆடிக் கொண்டும் ஹிப் ஹாப் பாட்டு பாடிக் கொண்டும் அறுவைசிகிச்சை செய்வது போன்று வீடியோக்களை எடுப்பதுதான்.   அதோடு அவற்றை சமூக வலைத்தளங்களிலும் பதிவேற்றம் செய்துள்ளார். 

அதில் ஒரு வீடியோவில் தானே பாடல் வரிகளை உருவாக்கி "நான் இங்கு வெட்டப்போகிறேன்" என பாடிக்கொண்டு மயக்க நிலையில் இருக்கும் நோயாளியின் கிழிக்கப்பட்ட வயிற்றுப் பகுதியை கேமராவுக்கு காண்பிக்கிறார். இந்நிலையில் வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்த பலரும்  கையில் கத்தியுடன் நடனமாடும் இவரது வீடியோக்களை பகிர்ந்தனர். பலர் வீடியோவைக் கண்டு அதிருப்தியை வெளிப்படுத்தினர். 

இதனைத் தொடர்ந்து போலீசார் விசாரித்ததில், 2016ல் திருமணம் நடைபெறவிருந்த நிலையில் தொப்பையை குறைக்க அறுவை சிகிச்சைக்கு சென்றவருக்கு இவரது செயல்பாடுகளால் இதய செயல்பாடு நின்று அவர் மூளைச்சாவு அடைந்ததாக தெரியவந்துள்ளது. ஆனால், அதை அவர் மறைத்ததும் வீடியோ பதிவு காரணமாக அம்பலமானது. இந்த நிலையில் விசாரணையில் அறுவை சிகிச்சை செய்ய இவர் உரிய உரிமம் பெறவில்லை என தெரிய வந்துள்ளது. இதையடுத்து இவர் கைது செய்யப்பட்டார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP