அமெரிக்காவில் கொடூரம்: கர்ப்பிணி வயிற்றை கிழித்து குழந்தை திருட்டு!

அமெரிக்காவில் பக்கத்து வீட்டு கர்ப்பிணி பெண்ணை கடத்தி அவரது வயிற்றில் இருந்த குழந்தையை திருடி வளர்த்து வந்த தம்பதியினர் கையும் களவுமாக பிடிப்பட்டு அவர்களுக்கு ஜாமீனில் வெளிவராதபடி ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
 | 

அமெரிக்காவில் கொடூரம்: கர்ப்பிணி வயிற்றை கிழித்து குழந்தை திருட்டு!

அமெரிக்காவில் பக்கத்து வீட்டு கர்ப்பிணி பெண்ணை கடத்தி அவரது வயிற்றில் இருந்த குழந்தையை திருடி வளர்த்து வந்த தம்பதியினர் கையும் களவுமாக பிடிப்பட்டு தண்டனைக்கு உள்ளாகியுள்ளனர். 

அமெரிக்காவில் வடக்கு டகோடா பகுதியில் வசித்து வந்தவர் சவான்னா கிரேவின்ட் (22). இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் காணாமல் போனதாக அப்பகுதி போலீசாரிடம் அவரது கணவர் மற்றும் உறவினர்கள் புகார் அளித்தனர். காணமல் போன நிலையில் சவான்னா 8 மாத கர்ப்பிணியாக இருந்தார். 

இந்த நிலையில் டகோடா சுற்றுப்புறத்தில் உள்ள ஆற்றங்கரையில் ஒரு பெண்ணின் உடல் ஒதுங்கியது. போலீசார் மேற்கொண்ட ஆய்வில் அந்த உடல்  சவான்னா கிரேவின்ட் உடையது என தெரியவந்தது. உடற்கூராய்வில் அவரது வயிறு கிழிக்கப்பட்ட நிலையில் இருந்தது. பிணத்தை கைப்பற்றிய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். ஆனால் வயிற்றில் இருந்த குழந்தையின் நிலை என்ன ஆனது என தெரியாமல் இருந்தது.

பல கோணத்தில் விசாரணை நடத்தப்பட்ட நிலையில் அவரது பக்கத்து வீட்டில் வசித்து வந்த புரூக் கிரவுஸ் மற்றும் அவரது காதலன் வில்லியம் கோயன் சேர்ந்து வாழ்ந்து வந்த வீட்டில் குழந்தை சத்தம் கேட்பதாக சந்தேகிக்கப்பட்டது. வீட்டை முற்றுகையிட்டு போலீசார் விசாரிக்கையில் அந்த தம்பது முன்னுக்குப்பின் முரணான பதில்களை கூறினார். சவான்னா கிரேவின்ட் குடும்பத்தினர் குழந்தையின் முக ஜாடை உள்ளிட்டவற்றை வைத்து வலுவான சந்தேகத்தை எழுப்பினர். 

பின்னர், இந்த தம்பத்தியினர் சேர்ந்து திட்டமிட்டு கர்ப்பிணியாக இருந்த சவான்னாவின் வயிற்றை கிழித்து குழந்தையை வெளியே எடுத்து வளர்த்தது அம்பலமானது. குழந்தையை திருடி பின் சவான்னாவின் உடலை அப்புறப்படுத்தியுள்ளனர். 

இது குறித்து அந்த பெண்ணின் காதலன் வில்லியம் கூறுகையில், அன்றைய தினம் நான் வீட்டிற்கு சென்ற போது, என்னுடைய காதலி பாத்ரூமில் ரத்தத்தை சுத்தம் செய்தார். திடீரென ஒரு குழந்தையை கொண்டு வந்து, இனிமேல் இது தான் நம்முடைய குடும்பம் என கூறினார். ஆனால் பின் மேற்கொண்ட விசாரணையில் இது பொய் வாக்குமூலம்,  இருவரும் சேர்ந்தே சதி செய்துள்ளனர் என்பது அம்பலமானது. 

முழுமையான விசாரணையை முடித்த போலீசார் ஊடகங்களிடம் கூறுகையில், ''வில்லியம் வீட்டில் சோதனை மேற்கொண்டபோது  அங்கிருந்த கயிற்றினை கைப்பற்றி டிஎன்ஏ சோதனை மேற்கொண்டோம். அதில் கயிற்றை கொண்டு சவான்னா-வின் கழுத்தை வில்லியம் நெரித்திருப்பது உறுதியாகியது. அவர்களு இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். 

வயிற்றை கிழித்து பெண்ணை படுகொலை செய்து குழந்தையை வெளியில் எடுத்து அதனை சட்டத்துக்கு புறம்பாக வளர்த்தது என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் உநிலையில்,  இவர்கள் ஜாமீனில் வெளிவராதபடி ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இந்த விநோத கொடூர குற்றச்செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP