அமெரிக்காவின் பேவரைட் 'சோசியலிச' வேட்பாளர், ட்ரம்ப்புக்கு எதிராக போட்டி!

அமெரிக்க அதிபர் தேர்தலில் அதிபர் ட்ரம்ப்புக்கு எதிராக பல்வேறு வேட்பாளர்கள் எதிர்க்கட்சியின் சார்பாக போட்டியிட களமிறங்கியுள்ள நிலையில், கடந்த தேர்தலில் அசத்திய பிரபல சோசியலிச வேட்பாளர் பெர்னி சாண்டர்ஸ் களத்தில் குதித்துள்ளார்.
 | 

அமெரிக்காவின் பேவரைட் 'சோசியலிச' வேட்பாளர், ட்ரம்ப்புக்கு எதிராக போட்டி!

அமெரிக்க அதிபர் தேர்தலில் அதிபர் ட்ரம்ப்புக்கு எதிராக பல்வேறு வேட்பாளர்கள் எதிர்க்கட்சியின் சார்பாக போட்டியிட களமிறங்கியுள்ள நிலையில், கடந்த தேர்தலில் அசத்திய பிரபல சோசியலிச வேட்பாளர் பெர்னி சாண்டர்ஸ் களத்தில் குதித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கு எதிராக 2020 அதிபர் தேர்தலில் போட்டியிட எதிர்க்கட்சியில் இருந்து பல்வேறு வேட்பாளர்கள் களத்தில் குதித்துள்ளனர். இதுவரை 20க்கும் மேற்பட்டோர், எதிர்கட்சியான ஜனநாயகக் கட்சியின் சார்பாக அதிபர் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தெரிவித்துள்ள நிலையில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பெர்னி சாண்டர்ஸ், தானும் அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஜனநாயகக் கட்சியின் வேட்பாளரை தேர்ந்தெடுக்க, இன்னும் சில மாதங்களில் உட்கட்சி தேர்தல் துவங்கும். இந்த தேர்தலில், தற்போதைய வேட்பாளர்களில் பெர்னி சாண்டர்ஸ் வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

2016 வரை சுயேட்சை வேட்பாளராக நின்று அமெரிக்க செனட் சபை உறுப்பினராக பணியாற்றி வந்த சாண்டர்ஸ், அப்போதைய அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக போட்டியிட களமிறங்கினார். பெரும் பண பலத்துடன் களமிறங்கிய ஹிலாரி கிளிண்டனுக்கு எதிராக, யாருமே எதிர்பார்க்காத அளவுக்கு இளைஞர்களின் ஓட்டுகளை பெற்று சாண்டர்ஸ் முன்னேற்றம் கண்டார். ஆனால், ஹிலாரி கிளிண்டனிடம் இறுதியில் தோல்வியடைந்தார்.

தற்போது, அதிபர் ட்ரம்ப் மீது அமெரிக்காவில் கடும் அதிருப்தி நிலவி வரும் நிலையில், 2020ல் எதிர்க்கட்சி வேட்பாளர் வெல்ல அதிக வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. இந்த நிலையில் மீண்டும் அதிபர் தேர்தலில் சாண்டர்ஸ் களமிறங்கியுள்ளது, ஜனநாயக கட்சியினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. சோசியலிசம் என்றாலே பயப்படும் அமெரிக்கர்களிடம், தான் ஒரு 'ஜனநாயக சோசியலிசவாதி' என பெருமையாக கூறிகொள்ளும் சாண்டர்ஸுக்கு, நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP