வெனிசுலா அதிபரை கொல்ல சதி: நிகோலஸ் பங்கேற்ற நிகழ்ச்சியில் ராக்கெட் குண்டு வீச்சு

வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ பங்கேற்ற நிகழ்ச்சியில் ராக்கெட் மூலம் வெடிபொருள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தக் கொலை முயற்சியில் இருந்து நிகோலஸ் உயிர் தப்பியதாகவும் அவர் பாதுகாப்பாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 | 

வெனிசுலாவில் நேற்று மாலை ராணுவ நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில் அந்நாட்டு அதிபர் நிகோலஸ் கலந்து கொண்டு உரையாற்றினார். வீரர்கள் அணிவகுப்பை முடித்து வரிசையில் நின்றி காத்திருந்தனர். அப்போது நிக்கோலஸ் பேசத் தொடர்ங்கிய சிறிது நேரத்தில் அங்கு வெடிமருந்துகள் நிரப்பப்பட்ட ராக்கெட்டுகள் வெடிக்க செய்யப்பட்டன.

வெனிசுலா அதிபரை கொல்ல சதி: நிகோலஸ் பங்கேற்ற நிகழ்ச்சியில் ராக்கெட் குண்டு வீச்சு

இதனை அடுத்து நிகோலஸ் உடனடியாக தனது பேச்சினை நிறுத்தினார்.  இந்த தாக்குதலில் அவர் காயமின்றி உயிர் தப்பினார்.  இதுபற்றி அவர் கூறுகையில், கொலை முயற்சிலிருந்து தப்பினேன்.  அதற்காக கடவுளுக்கு, நாட்டு மக்களுக்கு மற்றும் ஆயுத படையினருக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்றார். 

அதோடு, கொலம்பியா மற்றும் அமெரிக்காவினர் தன்னை கொல்ல திட்டமிட்டு சதி செய்துள்ளனர் என அவர் குற்றம்சாட்டியுள்ளார். 

வெனிசுலா அதிபராக இருந்த ஹியுகோ சாவேஸ் கடந்த 2013ஆம் ஆண்டு மறைந்தார். பின்னர் அவரது அரசியல் வாரிசான நிகோலஸ் மெஜுரோ (55) அதிபராக பொறுப்பேற்று கொண்டார்.

ஆனால் நிக்கோலசின் ஆட்சியில் அங்கு தொடர்ந்து உணவு, மருந்து பற்றாக்குறை ஏற்பட்டது.  குற்றச் சம்பவங்களும் அதிகரித்து அரசுக்கு நெருக்கடியான நிலை உள்ளது.  குடிநீர், மின்சாரம் மற்றும் போக்குவரத்து ஆகிய துறைகளில் சிக்கல் நிலவுவதால் அமைதியற்ற சூழ்நிலை நிலவுகிறது. 

இதே சூழளில் அவர் கடந்த மே மாதம் மீண்டும் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றார்.  இவர் அந்நாட்டில் பேருந்து ஓட்டுநராக இருந்து பின், யூனியன் தலைவராக வளர்ந்து தோடர்ந்து அரசியலில் நுழைந்தவர் ஆவார். பின்னர் ஹியுகோ சாவேஸ் ஆட்சியில் வெளிவிவகார துறை அமைச்சராகவும் இருந்து தொடர்ந்து வெனிசுலா நாட்டின் குடியரசு துணை தலைவராகவும் பதவி வகித்தார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP