கணினியில் பிரச்னை: லண்டனில் 1500 டாக்டர்கள் பணி நியமனம் ரத்து

பிரிட்டனில் கணினியில் ஏற்பட்ட பிரச்னையால், புதிதாக நியமிக்கப்பட்ட 1,500 இளநிலை மருத்துவர்களின் பணி நியமன ஆணை ரத்து செய்யப்பட்டது.
 | 

கணினியில் பிரச்னை: லண்டனில் 1500 டாக்டர்கள் பணி நியமனம் ரத்து

கணினியில் பிரச்னை: லண்டனில் 1500 டாக்டர்கள் பணி நியமனம் ரத்துபிரிட்டனில் கணினியில் ஏற்பட்ட பிரச்னையால், புதிதாக நியமிக்கப்பட்ட 1,500 இளநிலை மருத்துவர்களின் பணி நியமன ஆணை ரத்து செய்யப்பட்டது. 

இங்கிலாந்து, ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸ் பகுதிகளில் கடந்த மாதத்தில் 1,500 இளநிலை மருத்துவர்கள், 24 பிரிவுகளில் பல்வேறு பகுதிகளில் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில், இவர்களுக்கு வழங்கப்பட்ட பணி நியமன ஆணையை கடந்த வெள்ளிக்கிழமை பிரிட்டன் அரசு திடீரென திரும்ப பெற்றுள்ளது.

ஒரு கணினியிலிருந்து மற்றொரு கணினிக்கு தகவல்களை மாற்றும்போது, புதிய டாக்டர்களுக்கு வழங்கப்பட்ட மதிப்பெண்கள் அதிகமாக பதிவாகி இருப்பது கடந்த வியாழக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டதாக அரசு தெரிவித்துள்ளது. 

இந்த தவறுக்காக அரசு தரப்பில் மன்னிப்பு கடிதமும் வெளியிடப்பட்டது. பிரச்னைகள் சரி செய்யப்பட்டு புதிய பணி நியமன ஆணைகள் வரும் 14ம் தேதி வெளியிடப்படுகிறது. இதனிடையே, இந்த சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக பிரிட்டன் மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது. மேலும், ‘இந்த சம்பவம் ஏற்றுக் கொள்ள முடியாதது. இதனால், பணி நியமனம் ரத்து செய்யப்பட்ட இளநிலை மருத்துவர்கள், மிகுந்த மனவேதனை அடைந்திருப்பார்கள்’ என்று கூறப்பட்டுள்ளது.

அரசின் இந்த நடவடிக்கையால் புதிதாக பணியில் சேர ஆவலாக இருந்த மருத்துவர்கள்  வருத்தமடைந்தனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP