கொலம்பியா: ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் 6 பேர் பலி

கொலம்பியா நாட்டில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
 | 

கொலம்பியா: ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் 6 பேர் பலி

கொலம்பியா நாட்டில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். 

கொலம்பியாவின் பலன்கியூரோ ராணுவத் தளத்தில் இருந்து விமானப்படைக்கு சொந்தமான ஒரு ஹெலிகாப்டர் 6 பேருடன் கடந்த வெள்ளிக்கிழமை இரவு புறப்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. இதையடுத்து காணாமல் போன அந்த ஹெலிகாப்டரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. 

அப்போது, அந்நாட்டின் அல்பன் என்ற பகுதியில் ஹலிகாப்டர் விழுந்து நொறுங்கியிருப்பதை மீட்பு குழுவினர் கண்டுபிடித்தனர். இதில் பயணம் செய்த 6 பேரும் உயிரிழந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த ஹெலிகாப்டரில் கொலாம்பியா அதிபர் அவ்வப்போது பயணம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP