அதிபர் டிரம்ப் மீது சிஎன்என் வழக்கு!

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புடன் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து தங்கள் செய்தியாளர் வெள்ளை மாளிகையில் இருந்து தடை செய்யப்பட்டதை எதிர்த்து ட்ர்மப் உள்ளிட்ட 6 பேர் மீது சி.என்.என் நிறுவனம் வழக்கு தொடுத்துள்ளது.
 | 

அதிபர் டிரம்ப் மீது சிஎன்என் வழக்கு!

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புடன் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து தங்கள் செய்தியாளர் வெள்ளை மாளிகையில் இருந்து தடை செய்யப்பட்டதை எதிர்த்து ட்ர்மப் உள்ளிட்ட 6 பேர் மீது சி.என்.என் நிறுவனம் வழக்கு தொடுத்துள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தேர்தலில் வெற்றி பெற்றதில் இருந்தே பத்திரிகையாளர்கள் மீது அடிக்கடி விமர்சனங்களை எழுப்பி வருகிறார். தன்னைப் பற்றி பத்திரிகைகள் எப்போதுமே தவறாக சித்தரிப்பதாக கூறிவரும் ட்ரம்ப், முக்கியமாக சிஎன்என் நிறுவனத்தை பலமுறை கடுமையாக விமர்சித்துள்ளார். வெள்ளை மாளிகைக்கு பிரத்தியேகமாக நியமிக்கப்பட்ட சிஎன்என் நிறுவனத்தின் நிருபர் ஜிம் அக்கோஸ்டாவை, ட்ரம்ப் பலமுறை மோசமாக கண்டித்தும் விமர்சனம் செய்தும் உள்ளார்.

சமீபத்தில் அமெரிக்க இடைக்கால தேர்தலைத் தொடர்ந்து, டொனால்ட் ட்ரம்ப் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் சிஎன்என் நிறுவனத்தின் நிருபர் அக்கோஸ்டா கேள்வி எழுப்பினார். அப்போது அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் ட்ரம்ப். இந்த சம்பவத்தின் போது, வெள்ளை மாளிகை பெண் அதிகாரி ஒருவர், செய்தியாளரிடம் இருந்த மைக்கை பிடுங்க முயற்சித்தார். மைக்கை விடாமல் பிடித்திருந்த அக்கோஸ்டா, அந்தப் பெண்ணின் கையை ஓங்கி அடித்ததாக வெள்ளை மாளிகை குற்றம்சாட்டியது.

இது தொடர்பாக வெளியான வீடியோக்களில் நிருபர் அக்கோஸ்டா, எந்த தவறும் செய்யவில்லை என்பது தெளிவாக தெரிந்தது. ஆனால் அவர் அந்த பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதாக வெள்ளை மாளிகை தொடர்ந்து குற்றம் சாட்டி, அவருக்கு வழங்கப்பட்டிருந்த பத்திரிக்கையாளர் அனுமதியையும் ரத்து செய்தது. இதற்கு பல தரப்பிலிருந்து கண்டனங்கள் எழுந்தன.

இந்நிலையில், சிஎன்என் நிறுவனம் அமெரிக்க அதிபர் டிரம்ப், வெள்ளை மாளிகை தலைமை அதிகாரி ஜான் கெல்லி, செய்தித் தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு தொடுத்துள்ளது. உடனடியாக வெள்ளை மாளிகை எடுத்த நடவடிக்கையை தடை செய்ய வேண்டும் என்றும், தங்களது செய்தியாளரின் அனுமதி திருப்பி தரப்பட வேண்டும் என்றும், வருங்காலத்தில் அவர் மீது எந்த பழிவாங்கும் நடவடிக்கையும் எடுக்க கூடாது, என்றும் சிஎன்என் தனது வழக்கில் வலியுறுத்தியுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP