தகுதியின் அடிப்படையிலேயே குடியுரிமை: ட்ரம்ப் திட்டவட்டம்

அமெரிக்காவுக்கு குடிபெயர முயல்பவர்களுக்கு தகுதியின் அடிப்படையிலேயே குடியுரிமை வழங்கப்படும் என்றும், நாட்டிற்கு உதவுபவர்களுக்கு மட்டுமே குடியுரிமை என்றும், அந்நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
 | 

ட்ரம்ப் அதிபரான பிறகு, அமெரிக்காவுக்குள் அண்டை நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக குடிபெயர முயற்சி செய்பவர்கள் மீதும், சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறி வாழ்ந்து வருபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுத்து வந்தார். இந்தியர்கள் அதிகம் பயன்படுத்தி வந்த எச்1பி உள்ளிட்ட விசாக்கள் மீது பல கட்டுப்பாடுகளை விதித்தும் நடவடிக்கை எடுத்தார். சட்டபூர்வமாக குடிபெயர இருந்த வசதிகள் மீது தொடர்ந்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வந்தன.

அமெரிக்க மக்களுக்கு கிடைக்க வேண்டிய வேலைவாய்ப்புகளை மற்ற நாட்டவர்கள் பறித்துக் கொள்வதாக ட்ரம்ப் தரப்பில் கூறப்பட்டது. இந்நிலையில், இதுகுறித்து பேசிய ட்ரம்ப் "எல்லை விவகாரத்தில் நான் மிகவும் கடுமையானவன். அமெரிக்காவுக்குள் எல்லோரும் சட்டபூர்வமாக வர வேண்டும். சட்டவிரோதமாக வரக்கூடாது. தகுதி மிக முக்கியம். நாடு வளர உதவி செய்பவர்கள் இங்கு அதிகம் வர வேண்டும். முந்தைய ஆட்சியில் இருந்த தளர்வான விதிகளின் படி, பல குற்றவாளிகள் நாட்டுக்குள் வந்தனர். நான் எடுத்த நடவடிக்கைகளால் அது குறைந்துள்ளது. அமெரிக்க மக்களும் இதையே விரும்புகின்றனர்" என்றார் ட்ரம்ப்.

newstm.in
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP