அமெரிக்க கார்களுக்கு சீனா வரியை குறைக்கும்: ட்ரம்ப் கூறுகிறார்

அர்ஜென்டினாவில் நடந்த ஜி20 மாநாட்டில் அமெரிக்க கார்களுக்கு சீனா விதிக்கும் 40 சதவீத வரியை ரத்து செய்ய முன்வந்துள்ளதாக ட்ரம்ப் டிவிட்டரில் கூறியுள்ளார். ஆனால் இது தொடர்பாக சீனா எந்தக் கருத்தும் வெளியிடவில்லை.
 | 

அமெரிக்க கார்களுக்கு சீனா வரியை குறைக்கும்: ட்ரம்ப் கூறுகிறார்

அமெரிக்க கார்களுக்கு விதிக்கப்படும் 40 சதவீத வரியை குறைப்பதாக சீனா கூறியதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஆனால் இதற்கு சீன தரப்பு பதில் தராமல் உள்ளது. 

அர்ஜென்டினாவில் நடந்த ஜி20 மாநாட்டில் ட்ரம்ப், சீன அதிபர் ஜீ ஜின்பிங் சந்தித்து வர்த்தக போர் குறித்து பேசியதாக தகவல்கள் வெளியாகின. வர்த்தக போரை முடிவுக்கு கொண்டு வரும் விதத்தில் 90 நாட்களுக்கு வரிகளை உயர்த்துவதில்லை என இரு நாடுகளும் முடிவு செய்தன. இந்நிலையில் வரிகள் அனைத்தையும் நீக்குமாறு அறிவுறுத்தியுள்ளதாக சீன வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளதாக ராயட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதனிடையே ட்ரம்ப் தனது ட்விட்டரில் கூறுகையில், ''அமெரிக்க கார்களுக்கு சீனா விதிக்கும் 40 சதவீத வரியை ரத்து செய்ய முன்வந்துள்ளதாக கூறியுள்ளார். 

ஆனால் இது தொடர்பாக சீனா எந்தக் கருத்தும் வெளியிடவில்லை. புத்தாண்டில் 200 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான சீன பொருட்கள் மீதான வரி 10 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை உயர்த்தப்படும், மேலும் பல சீன பொருட்களுக்கு புதிதாக வரியும் விதிக்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.

ஆனால் அதற்கு சில நாட்கள் இடைவெளி உள்ளதால் இந்த பிரச்னைக்கு தற்காலிக தீர்வு ஏற்படலாம் என தெரிகிறது. வர்த்தக போர் முடிவுக்கு வந்தால் கார் உற்பத்தியில் தற்போது உள்ள சுணக்கம் சரியாகும். இருநாடுகளும் ஒத்துழைப்பு அளிக்காமல் போனால் வர்த்தக போர் அடுத்துக் கட்டத்துக்கு செல்லும் அபாயம் ஏற்படும். 

இந்த ஆண்டு ஜூலை முதல் சீன பொருட்கள் மீது அமெரிக்கா 250 பில்லியன் டாலர்கள் கூடுதல் வரி விதித்தது. அதற்கு பதிலடியாக அமெரிக்க பொருட்கள் மீது 110 பில்லியன் டாலர் வரியை சீனா விதித்தது.

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP