சீனா ஜாக்கிரதை! இந்தோ பசிபிக் படைகள் என பெயர் மாற்றியது அமெரிக்கா

70 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் அமெரிக்காவின் பசிபிக் படைகளின் பெயரை இந்தோ - பசிபிக் படைகள் என பெயர் மாற்றம் செய்துள்ளது அந்நாடு.
 | 

சீனா ஜாக்கிரதை! இந்தோ பசிபிக் படைகள் என பெயர் மாற்றியது அமெரிக்கா

70 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் அமெரிக்காவின் பசிபிக் படைகளின் பெயரை இந்தோ - பசிபிக் படைகள் என பெயர் மாற்றம் செய்துள்ளது அந்நாடு.

பசிபிக் கடல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியை பாதுகாத்து வரும் அமெரிக்க படைகளுக்கு பசிபிக் கமேண்ட் என பெயர். அமெரிக்கா முதல் இந்தியா வரை, சுமார் 10 கோடி சதுர மைல்களை பசிபிக் கமேண்ட் கண்காணித்து வருகிறது. உலகின் மிகப்பெரிய ராணுவ படையாக இது கருதப்படுகிறது. பசிபிக் கமேண்டின் பெயரை அமெரிக்க அரசு, இந்தோ - பசிபிக் கமேண்ட் என மாற்றி உத்தரவிட்டுள்ளது. 

பசிபிக் பெருங்கடலுடன் சேர்த்து, இந்திய பெருங்கடலையும் இந்த படைகள் கண்காணித்து வரும் நிலையில், இந்த பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது இந்தியாவுடனான ராணுவ ஒத்துழைப்பை அமெரிக்கா அதிகரிக்க திட்டமிடுவதற்கான அறிகுறி என நிபுணர்கள் கூறியுள்ளனர். ஹவாயில் பசிபிக் கமேண்டின் புதிய தலைவராக அட்மிரல் பிலிப்ஸ் டேவிட்ஸன் நியமிக்கப்பட்டார். அப்போது, இந்த புதிய பெயர் மாற்றத்தை அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் ஜிம் மேட்டிஸ் தெரிவித்தார். 

அமெரிக்க பசிபிக் கமேண்ட், நம்முடைய மிகப்பெரிய ராணுவ பிரிவு. உலகின் பரப்பளவில் பாதியை, ஹாலிவுட் முதல் பாலிவுட், பென்குயின் முதல் பனிக்கரடி வரை, அனைத்து பகுதிகளையும் கண்காணிப்பதோடு, ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறோம். புதிய முதலீடுகள் மற்றும் வர்த்தகத்திற்கு ஆதரவாக எந்த ஒரு நாட்டின் தனிப்பட்ட பொருளாதார அடக்குமுறைக்கு பயப்படாமல் இருக்க துணை புரிகிறோம்" என்றார் மேட்டிஸ். கடந்த சில வருடங்களாக சீனா தனது 'ஒன் பெல்ட், ஒன் ரோட்' திட்டத்தை செயல்படுத்தி, ஐரோப்பிய ஆசிய நாடுகளின் வர்த்தகத்தில் பெருமளவு ஆதிக்கம் செலுத்த முயற்சித்து வருகிறது. இதை குறிப்பிட்டே மேட்டிஸ் இவ்வாறு பேசியதாக கூறப்படுகிறது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP