சிகாகோ மருத்துவமனையில் துப்பாக்கிச்சூடு: 4 பேர் பலி 

அமெரிக்காவில் சிகாகோ மருத்துவமனையில் மருத்துவர் ஒருவருடன் வாக்குவாதம் செய்த அவரது காதலர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 3 பேர் பலியாகினர். போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அந்த நபரும் பலியானார்.
 | 

சிகாகோ மருத்துவமனையில் துப்பாக்கிச்சூடு: 4 பேர் பலி 

அமெரிக்காவின் சிகாகோ நகர மருத்துவமனையில் மருத்துவர் ஒருவருடன் வாக்குவாதம் செய்த அவரது காதலர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 3 பேர் பலியாகினர். போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அந்த நபரும் கொல்லப்பட்டார். 

அமெரிக்காவின் சிகாகோ நகரில் உள்ள மெர்சி மருத்துவமனைக்கு திங்கட்கிழமை வந்த நபர் கார் நிறுத்தும் இடத்தில் மருத்துவர் தமாரா ஓ நீல் என்பவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அந்த நபர் மருத்துவரின் காதலன் என அடையாளம் காணப்பட்டது. 

இருவருக்கும் இடையில் பொது இடத்தில் வாக்குவாதம் சந்தையாக மாறியபோது காரரும் எதிர்பாராத விதமாக அந்த நபர் மருதத்துவார் மீது துப்பாக்கிச சூடு நடத்தினார். இதில் தமாரா சம்பவ இடத்திலேய பலியானார். 

இதையடுத்து அந்த நபர் மருத்துவமனைக்குள் நுழைந்து சுடத் தொடங்கினார். இதில் மருத்துவமனை ஊழியர் மற்றும் போலீஸ் அதிகாரி ஒருவர் மீது குண்டு பாய்ந்தது. இதில் அந்த இருவருமே பலியாகிவிட்டனர். துப்பாக்கிச்சூடு நடத்திய அந்த நபரை நோக்கி போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். இதில் அந்த நபர் உயிர் இழந்தார். இந்த சம்பவத்தால் மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

மருத்துவமனை என்றும் பார்க்காமல் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் சிகாகோ நகரில் பதற்றத்தை ஏற்படுத்தியது. 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP