பாஸ்வேர்டை மாற்றுங்கள்: ட்விட்டர் எச்சரிக்கை

ட்விட்டர் பயனாளர்கள் தங்களது பாஸ்வேர்டுகளை மாற்றிக்கொள்ளுமாறு அந்த நிறுவனம் அறிவிப்பொன்றை வலியுறுத்தியுள்ளது.
 | 

பாஸ்வேர்டை மாற்றுங்கள்: ட்விட்டர் எச்சரிக்கை

பாஸ்வேர்டை மாற்றுங்கள்: ட்விட்டர் எச்சரிக்கைட்விட்டர் பயனாளர்கள் தங்களது பாஸ்வேர்டுகளை மாற்றிக்கொள்ளுமாறு அந்த நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 

சமூக வலைதளங்களில் முன்னணியில் இருக்கும் ட்விட்டர், அமெரிக்காவின் சான்பிரான்ஸிஸ்கோவை தலைமையகமாக கொண்டு இயங்கி வருகிறது. ட்விட்டர் நிறுவனத்தில், தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதன் காரணமாக, பயனாளர்களின் பாஸ்வேர்டுகள் சில சேமிக்கப்பட்டதாகவும், இதை சில ஊழியர்கள் பார்த்துள்ளதாகவும் நிறுவனத்துக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனால், ட்விட்டரில் உள்ள 330 மில்லியன் பயனாளர்களும் தங்களது பாஸ்வேர்டை மாற்றிக்கொள்ளுமாறு அந்த நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. இந்த விவகாரத்தால்  ஏற்பட்ட பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும்விதமாக, தொழில்நுட்ப கோளாறு பிரச்னை சரி செய்யப்பட்டுவிட்டதாகவும், நடைபெற்ற விசாரணையில், பாஸ்வேர்டுகளை திருடியதற்கான எந்த அறிகுறியும் இல்லை எனவும் ட்விட்டர் நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP