அதிபரின் முன்னாள் வழக்கறிஞர் சிறையில் அடைப்பு !

வரி ஏய்ப்பு, நிதி முறைகேடு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் மூன்றாண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட அமெரிக்க அதிபர் ட்ரம்பின் முன்னாள் வழக்கறிஞர் மைக்கேல் கோஹன் இன்று சிறையில் அடைக்கப்பட்டார்.
 | 

அதிபரின் முன்னாள் வழக்கறிஞர் சிறையில் அடைப்பு !

வரி ஏய்ப்பு, நிதி முறைகேடு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில்  மூன்றாண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட அமெரிக்க அதிபர் ட்ரம்பின் முன்னாள்  வழக்கறிஞர் மைக்கேல் கோஹன் இன்று சிறையில் அடைக்கப்பட்டார். அமெரிக்க  தலைநகர் நியூயார்க்கிலிருந்து 70 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ஓட்டிஸ்வில்லி சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.

அதிபர் ட்ரம்ப் தங்களுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாக குற்றம்சாட்டிய இரு பெண்களை சமரசம் செய்ய, அவர்களுக்கு சட்டவிரோதமாக பணம் கொடுத்த விவகாரத்தில் ட்ரம்ப்பின் வழக்கறிஞர் மைக்கேல் கோஹன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

மேலும், தேர்தல் நேரத்தின்போது,  ஒரு வேட்பாளருக்கு ஆதரவாக நடைபெறும் எந்த செயலையும் அரசிடம் தெரிவிக்க வேண்டும். ஆனால், ட்ரம்ப் தொடர்பான உண்மைகள் வெளியில் தெரியாமல் மறைக்க மைக்கேல் கோஹன் சட்டவிரோதமாக உதவியாக இருந்ததாகவும் அவர் மீதுகுற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக மைக்கேல் கோஹனை நாடாளுமன்றத்தில் அழைத்து விசாரித்தபோது, அவர் அங்கு உண்மையை மறைத்தார்.

அத்துடன், வெளிநாட்டில் இருந்து தனக்கு வந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான பணத்தை அரசிடம் தெரிவிக்காமல் மறைத்துள்ளதாகவும் கோஹன் மீது குற்றம்சட்டப்பட்டிருந்தது. நீதிமன்ற விசாரணையில் இக்குற்றசாட்டுகள் நிரூபணமானது.

இருப்பினும் அவர் அப்ரூவராக மாறியதால், குறைந்தபட்சமாக, மூன்றாண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நியூயார்க் நீதிமன்றம் கடந்தாண்டு டிசம்பரில் உத்தரவிட்டிருந்தது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP