தென்கொரியாவுடனான பேச்சுவார்த்தை ரத்து; டிரம்ப் -கிம் ஜோங் சந்திப்பு நடக்குமா?

அணுஆயுத சோதனைகளை முழுமையாக கைவிட வேண்டும் என்று கூறினால் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடக்காது என வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.
 | 

சுமார் 65 ஆண்டுகளுக்கு பிறகு 'எதிரும் புதிருமாக' இருந்த கொரிய நாடுகள் ஒன்றிணைந்துள்ளன. முதற்கட்டமாக கடந்த 27ம் தேதி கொரிய எல்லையில் இரு நாட்டு அதிபர்களும் சந்தித்து பேசினர். அப்போது கொரிய தீபகற்பத்தில் நடக்கும் போரை முடிவுக்கு கொண்டு வருவதாக இரண்டு நாடுகளும் ஒப்பந்தம் செய்துகொண்டன. மேலும் இரு நாடுகளுக்கும் இடையே அமைதியை நிலைநாட்டவும் உறுதி செய்யப்பட்டது. 

இதைதொடர்ந்து வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் - அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்திப்பு ஜூன் 12ம் தேதி சிங்கப்பூரில் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டது. உலக அமைதி குறித்து இந்த சந்திப்பில் டிரம்ப் பேச இருப்பதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில் உலக நாடுகள் அனைவரும் எதிர்பார்த்திருந்த இந்த சந்திப்பு நடக்குமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. 

தென்கொரியாவுடனான பேச்சுவார்த்தை ரத்து; டிரம்ப் -கிம் ஜோங் சந்திப்பு நடக்குமா?

அதாவது இந்த சந்திப்பு அறிவிப்பிற்கு பிறகு, தென்கொரியா - அமெரிக்கா நாடுகள் இணைந்து ராணுவ பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. இது வடகொரியாவுக்கு எதிராகக்கூட இருக்கலாம் என அந்நாட்டுத் உயர் அதிகாரிகள் சந்தேகிக்க, வடகொரிய அதிபர் கிம் ஜோங் இதற்கு ஒரு 'செக்' வைத்துள்ளார். 

இன்று தென்கொரியாவுடன் நடைபெற இருந்த உயர்மட்ட பேச்சுவார்த்தையை வடகொரியா ரத்து செய்துள்ளது. இதைத்தொடர்ந்து, 'தங்களை முழுமையாக அணுஆயுத சோதனையை  நிறுத்துமாறு அமெரிக்கா வற்புறுத்தக்கூடாது. இல்லையென்றால் ஜூன் 12ம் தேதி நடைபெற இருக்கும் அமெரிக்கா- வடகொரியா இடையேயான பேச்சுவார்த்தை ரத்து செய்யப்படும்' என வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது. முன்னதாக வடகொரியாவில் இயங்கி வரும் அணுஆயுத சோதனை கூடத்தை மூடுவதாக வடகொரியா அமெரிக்காவிடம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP