அமெரிக்க ஊழியர்களுக்கு பீட்சா வழங்கிய கனடா நாட்டு தொழிலாளர்கள்

அமெரிக்காவில் அரசுப் பணிகள் முடங்கியுள்ள நிலையில் அந்நாட்டைச் சேர்ந்த விமானப் போக்குவரத்து ஊழியர்களுக்கு கனடா விமானப் போக்குவரத்து ஊழியர்கள் பீட்சா வாங்கிக்கொடுத்துள்ளனர்.
 | 

அமெரிக்காவில் மெக்ஸிகோ எல்லையில் சுவர் கட்டும் அதிபர்  டிரம்பின் திட்டத்துக்கு நிதி ஒதுக்க அந்நாட்டு காங்கிரஸ் மறுக்கிறது.  இதனால் ஏற்பட்ட சிக்கலால் பல அரசுத் துறைகளுக்கு நிதி ஒதுக்கும் நிதி மசோதா நிறைவேற்றப்படவில்லை. இதன் விளைவாக அந்நாட்டின் அரசுப் பணிகள் பாதி அளவுக்கு முடங்கிவிட்டது. 

கடந்த டிசம்பர் 22ஆம் தேதி முதல் அந்நாட்டில் அரசுத்துறைகள் பாதி அளவே செயல்படுகின்றன. இதுவே அந்நாட்டில் நடந்த நீண்ட அரசாங்கப் பணி முடக்கம் ஆகும்.

அரசின் இந்த குறைவான இயக்கத்தினால் அந்நாட்டில் சுமார் 8 லட்சம் பேர் சம்பளம் பெறாமல் வேலை பார்த்துவருகிறார்கள். விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டில் பணிபுரியும் ஊழியர்கள் கிட்டத்தட்ட 10 ஆயிரம் பேர் சம்பளம் பெறாமல் வேலையில் உள்ளனர். 

இந்நிலையில், கனடா நாட்டைச் சேர்ந்த விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு ஊழியர்கள் தங்களைப் போல அமெரிக்காவில் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு ஊழியர்களாக உள்ளவர்களுக்கு பீட்சா வழங்கி ஆதரவு தெரிவித்துள்ளனர். 
newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP