நமோ செயலி தகவல்கள் கசிவா? - அமெரிக்க நிறுவனம் விளக்கம்

நமோ செயலி தகவல் கசியவிடப்பட்டதாக எழுந்தக் குற்றச்சாட்டைத் தொடர்ந்து அது தொடர்பான விளக்கத்தை அமெரிக்க நிறுவனம் அளித்துள்ளது.
 | 

நமோ செயலி தகவல்கள் கசிவா? - அமெரிக்க நிறுவனம் விளக்கம்

நமோ செயலி தகவல்கள் கசிவா? - அமெரிக்க நிறுவனம் விளக்கம்நமோ செயலி தகவல் கசியவிடப்பட்டதாக எழுந்தக் குற்றச்சாட்டைத் தொடர்ந்து அது தொடர்பான விளக்கத்தை அமெரிக்க நிறுவனம் அளித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி பெயரில், 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கப்பட்டது நமோ செயலி (நமோ ஆப்). இந்த செயலியை 50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த செயலியில் இருந்து பொதுமக்களின் தகவல்களை அமெரிக்க நிறுவனமான "கிளவர் டேப்", சம்மந்தப்பட்டவர்களின் அனுமதியின்றி பெற்று, மூன்றாம் தரப்பினருக்கு அளிக்கப்படுவதாக பிரான்ஸ் சைபர் பாதுகாப்பு வல்லுனர் எலியட் ஆல்டர்சன் தகவல் வெளியிட்டார். இது தொடர்பாக சர்ச்சை கிளம்பியதை அடுத்து "கிளவர் டேப்" நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. 

அந்த நிறுவனத்தின் பொறுப்பாளர்களில் ஒருவரான ஆனந்த் ஜெயின், தனது வலைப்பக்கத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டு உள்ளார். அதில், "தனிநபர் அந்தரங்க தகவல், பாதுகாப்பு, கிளவர் டேப் போன்ற சேவை நிறுவனங்களின் பங்களிப்பு பற்றி விவாதங்கள் எழுந்து உள்ளன. வெளியீட்டாளர்களின் தகவல்களைப் பொறுத்தவரையில், அவற்றை கிளவர் டேப் நிறுவனம் விற்பதோ, பகிர்ந்துகொள்வதோ, மறு சந்தையிடுவது போன்ற காரியங்களிலோ ஈடுபடுவதில்லை. ஆனால், தற்போது வெளியாகியுள்ள செய்திகள் வேடிக்கையாக உள்ளன"  என்று குறிப்பிடப்பட்டுள்ளார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP