கலிபோர்னியா காட்டுத் தீ; பலி எண்ணிக்கை 78 ஆக உயர்வு!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ஏற்பட்ட இரண்டு மிகப்பெரிய காட்டுத்தீயால் இதுவரை பலியானோர் எண்ணிக்கை 78ஆக உயர்ந்துள்ளது 1,276 பேர் மாயமாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
 | 

அமெரிக்காவின் மிகப்பெரிய மாகாணமான கலிபோர்னியாவின் வடக்கு பகுதியில், கேம்ப் பயர் என்ற இடத்தில் இருந்து பயங்கர காட்டுத் தீ உருவானது. இந்த காட்டுத் தீ தொடர்ந்து பரவி, பல்லாயிரம் கோடிக்கணக்கான சொத்துக்களை சேதம் செய்தது. இதில் 1.5 லட்சம் ஏக்கர் பரப்பளவு காடுகளை இந்த தீ நாசம் செய்தது. 9700 வீடுகள் இந்த காட்டுத் தீயில் சேதமடைந்தது. நவம்பர் 8ம் தேதி துவங்கிய இந்த காட்டுத்தீயால் 76 பேர் இறந்துள்ளனர்.

அதேபோல தெற்கு கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள வுல்ஸ்லி என்ற பகுதியில் மற்றொரு காட்டுத் தீ துவங்கியது. ஒரு காரில் பயணம் செய்த இரண்டு பேர் இந்த காட்டுத் தீயில் உடல் கருகி பலியானார்கள். வுல்ஸ்லியால் 483 கட்டிடங்கள் சேதமடைந்தன.

காட்டுத் தீ குறித்து தகவல் தெரிவித்த தீயணைப்பு படையினர், 50% காட்டுத் தீ கட்டுக்குள் கொண்டு வரப் பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். அடிக்கடி காட்டுத் தீ ஏற்படும் கலிபோர்னியாவின் சரித்திரத்திலேயே இதுதான் மிக பயங்கரமான காட்டுத்தீயாகும். 

newstm.in
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP