தன்னைத் தானே சுட்டு பலியான சிறுவன்: இரண்டு ஆண்டுகள் கழித்து தந்தை கைது!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் 2 வயது குழந்தை துப்பாக்கி வைத்து விளையாடியபோது தன்னைத் தானே தவறுதலாக சுட்டுக் கொண்டதில் பலியானது. இந்த வழக்கில் சிறுவனது தந்தை தற்போது கைது செய்யப்பட்டார்.
 | 

கடந்த 2015ம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தின் ஹவுஸ்டன் நகரைச் சேர்ந்த டாஸ்மன் மெய்ல் என்பவர் தனது 2 வயது குழந்தையுடன் படுக்கை அறையில் தூங்கிக் கொண்டிருந்தார். இரவில், படுக்கையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கைத்துப்பாக்கியை எடுத்து குழந்தை விளையாடிக்கொண்டிருந்தது. அப்போது தவறுதலாக தன்னைத் தானே சுட்டுக் கொண்டதில் குழந்தையின் தலையில் குண்டு பாய்ந்தது. 

உடனடியாக குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். உயர் சிகிச்சைக்காக ஹெலிகாப்டரில் சிறுவன் கொண்டு செல்லப்பட்டான். ஆனால் பலனின்றி சிறுவன் பலியானார். இதையடுத்து நடத்தப்பட்ட வழக்கு விசாரணையில், அனுமதியின்றி ஆயுதம் வைத்திருத்தல், ஆயுதங்களை அஜாக்கிரதையாக கையாளுதல் உள்ளிட்ட பிரிவின் கீழ் மெய்ல் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP