ஆடையில் தீப் பற்ற வைத்து வினோத ஓரினச்சேர்க்கை திருமணம் 

அமெரிக்காவில் ஓரினச்சேர்க்கை புதுமண தம்பதிகள் தங்களது ஆடைகளில் தீப் பற்ற வைத்துக் கொண்டு வினோமாக நடத்திய திருமண நிகழ்வின் வீடியோக் காட்சி தற்போது இணையத்தில் பரவலாக பகிரப்பட்டு வைரலாக வலம் வருகிறது.
 | 

ஆடையில் தீப் பற்ற வைத்து வினோத ஓரினச்சேர்க்கை திருமணம் 

அமெரிக்காவில் ஓரினச்சேர்க்கை புதுமண தம்பதிகள் தங்களது ஆடைகளில் தீப் பற்ற வைத்து கொண்டாடிய திருமண நிகழ்வு குறித்த வீடியோ அதாக அளவில் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. 

அமெரிக்காவின் லொவா மாநிலத்தைச் சேர்ந்த நெருங்கிய தோழிகள் ஏப்ரில் சோய் மற்றும் பெத்தனி பைர்னஸ். ஏற்கெனவே திருமணமான இவர்கள் தங்களது கணவர்களின் சம்மதத்தோடு அவர்களிடமிருந்து விவாகரத்துப் பெற்று அவர்களது முன்னிலையில் இருவருக்கும் கடந்த வாரம் திருமணம் நடந்தது.  தங்களது திருமணத்தை விநோதமாக நடத்த விரும்பிய இவர்கள் வெர்னான் என்ற பகுதியில் உள்ள குன்றின் மேல் தங்களது திருமணத்தை நடத்த ஏற்பாடு செய்திருந்தனர். 

அப்போது தங்களது திருமண ஆடையில் தீ வைக்குமாறு கணவர்களை இருத் தோழிகளும் கேட்டுக் கொண்டனர். அதற்கு அவர்களும் சம்மதம் தெரிவித்து திருமண ஆடையில் தீப் பந்தத்தைக் கொண்டு தீயைப் பற்ற வைத்தனர். அவ்வாறே திருமண தம்பதிகள் போஸ் கொடுத்தனர். அடுத்த சில நொடிகளில் தீப்பற்றிய மேலங்கி கழன்று விழுந்ததும், இருவரும் அதிலிருந்து வெளியேறி தங்களது திருமணத்தை ஆனந்தமாக கொண்டாடினர். இந்த வினோத திருமணத்தின் வீடியோக் காட்சி தற்போது இணையத்தில் பரவலாக பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP