ஆதார் சிறந்த முறை: மோடியை புகழ்ந்த பில் கேட்ஸ்

ஆதார் முறையை அனைத்து நாடுகளும் பின்பற்ற வேண்டும் என்று பில்கேட்ஸ் கூறியுள்ளார்.
 | 

ஆதார் சிறந்த முறை: மோடியை புகழ்ந்த பில் கேட்ஸ்

ஆதார் சிறந்த முறை: மோடியை புகழ்ந்த பில் கேட்ஸ்ஆதார் தொழில் நுட்பத்தை வளர்க்கும் மோடியை பாராட்ட வேண்டும் என்றும் இந்தமுறையை அனைத்து நாடுகளும் பின்பற்ற வேண்டும் என்றும் பில்கேட்ஸ் கூறியுள்ளார். 

வாஷிங்டன் நகரத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பில்கேட்ஸ், இந்தியாவின் ஆதார் தொழில் நுட்ப முறை மிகவும் சிறந்தது. பில் மற்றும் மெலின்டா கேட்ஸ் அறக்கட்டளை சார்பில் இந்த முறையை பல நாடுகளில் கொண்டு வர நிதி உதவி கொடுத்து வருகின்றோம். இதற்கான பணிகளை இன்போசிஸ் நந்தன் நில்கானி செய்து வருகிறார். அவர் தான் ஆதார் தொழில்நுட்பத்தில் பெரிய பங்கு வகித்தவர். 

ஆதார் மூலம் தனி நபர் தகவல்கள் வெளியாக வாய்ப்பில்லை. அதன் நன்மைகள் அதிகம். இந்தியாவை சுற்றி உள்ள சில நாடுகள் ஆதார் தொழில்நுட்பம் குறித்து இந்தியாவிடம்  உதவிகள் கேட்டு வருகின்றன. இந்த முறையை இந்திய பிரதமர் நரேந்திர மோடி தான் வளர்த்து வருகிறார். அவருக்கு தான் மொத்த பாராட்டும் சென்றடைய வேண்டும் என்று கூறினார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP